51

செல்ல விரும்பலுஞ் சென்றவற் குணர்த்தலும்
சொல்லிய கூற்றெனச் சொல்லலுங் கிழவோன்
வரவு மீண்டுவந் தரிவைக் குணர்த்தலும்
அணிநலம் 1பெற்றமை யறியான் போன்றவட்
பணிவொடு வினாதலும் பாணற் குரிய.

(இ - ம்.) வாயில்களுட் பாணற்கு உரியன எல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வாயில்வேண்டன் முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் பாணற்குரியன என்றவாறு.

(95)

விறலிக்கு உரிய செயல்

96. செலவிற் றேற்றலும் புலவியிற் றணித்தலும்
வாயில் வேண்டலும் வாயில்நேர் வித்தலும்
தெரியிழை விறலிக் குரிய வாகும்.

(இ - ம்.) விறலிக்கு உரியன வெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செலவிற்றேற்றன் முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் விறலிக்குரியனவாம் என்றவாறு.

(96)

கூத்தர்க்கு உரிய செயல்

97. செல்வம் வாழ்த்தலும் நல்லறிவு கொளுத்தலும்
கலனணி புணர்த்தலும் காமநுகர் 2புணர்த்தலும்
புலவிமுதிர் காலைப் புலங்கொள வேதுவிற்
றேற்றலும் சேய்மை செப்பலும் பாசறை
மேற்சென் றுரைத்தலும் மீண்டுவர 3வுணர்த்தலும்
கூற்றரு மரபிற் கூத்தர்க் குரிய.


1. பெறாமை என்றும் பாடம்.

2. கலனணி புரைத்தலும் காமநுகர்புரைத்தலும் என்றும் பாடம்.

3. உரைத்தலும் என்றும் பாடம்.