52

(இ - ம்.) கூத்தர்க்கு உரியனவெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செல்வம் வாழ்த்தல் முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாங் கூத்தர்க்கு உரியனவாம் என்றவாறு.

(97)

இளையோர்க்கு உரிய செயல்

98. மடந்தையை வாயில் வேண்டலும் வாயில்
உடன்படுத் தலும்அவள் ஊடல் தீர்த்தலுங்
கொற்றவற் குணர்த்தலுங் குற்றேவல் செய்தலும்
சென்றுமுன் வரவு செப்பலும் அவன்றிறம்
ஒன்றிநின் றுரைத்தலும் வினைமுடி புரைத்தலும்
வழியியல்பு கூறலும் வழியிடைக் கண்டன
மொழிதலும் இளையோர் 1தொழிலென மொழிப.

(இ - ம்.) இளையோர்க்கு உரியனவெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மடந்தையை வாயில்வேண்டல் முதலாகச் சொல்லப்பட்டன வெல்லாம் இளையோர்க்குரியனவாம் என்றவாறு.

(98)

கண்டோர்க்கு உரிய செயல்

99. தீதுடைப் புலவி தீர்த்தலும் அவன்வரல்
காதலிக் குரைத்தலும் கண்டோர்க் குரிய.

(இ - ம்.) கண்டோர்க்கு உரியனவெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) புலவிதீர்த்தல் முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாங் கண்டோர்க் குரியனவாம் என்றவாறு.

(99)

பார்ப்பனப் பாங்கர்க்கு உரிய செயல்

100. இளமையும் யாக்கையும் வளமையும் ஏனவும்
நிலையாத் தன்மை நிலையெடுத் துரைத்தலும்
செலவழுங்கு வித்தலும் செலவுடன் படுத்தலும்
பிறவு மெல்லா மறையோர்க் குரிய.


1. தொழிலெனற்குரிய என்றும் பாடம்.