2. களவியல் களவின் இலக்கணம் 117. உளமலி காதற் களவெனப் படுவ தொருநான்கு வேதத் திருநான்கு மன்றலுள் யாழோர் கூட்டத் தியல்பின தென்ப. என்பது சூத்திரம். இவ்வொத்து என்ன பெயர்த்தோ? எனின், களவுணர்த்தினமையாற் களவியல் என்னும் பெயர்த்து. இதனுள் இத் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ? எனின், களவு கற்பு என்னுங் கைகோள் இரண்டனுள் களவென்னும் கைகோளினது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உளம் மலிதற்குக் காரணமாகிய அன்பினையுடைய களவென்று சொல்லப்படுகிறது. நான்காகிய வேதத்துட் சொல்லப்பட்ட எட்டாகிய மணத்துட் காந்தருவ மணத்தோடு ஒத்த இயல்பினை உடையதென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. என்னை? 1"இன்பமும் பொருளு மறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட் டுறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே" என்றாராகலின். வேதம் நான்காவன, இருக்கு முதலாயின. மன்ற லெட்டாவன, பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம் தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என விவை. என்னை? 2"அறனிலை யொப்பே பொருள்கோ டெய்வம் யாழோர் கூட்ட மரும்பொருள் வினையே யிராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய
1. தொல், பொருள், களவியல், சூ. 1. 2. இறையனார் அகப்பொருள், முதற்சூத்திர உரை மேற்கோள் (பக்கம் 28).
|