1"புயலே சுமந்து பிறையே யணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை யன்னஞ்செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே" எனவும், 2"கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா அரும்பிவர் மென்முலை தொத்தாப்-பெரும்பணைத்தோள் பெண்டகைப் பொலிந்த பூங்கொடி கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே". எனவும் வரும். (3) ஐயம் 120. மடமா னோக்கி வடிவுங் கண்ட இடமுஞ் சிறந்துழி யெய்துவ தையம். (இ - ம்.) ஐயம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகள் வடிவும் அவளைத் தான்கண்ட இடமுஞ் சிறப்புடைய ஆய காலத்துத் தலைமகன்பால் ஐயம் நிகழும் என்றவாறு. எனவே, அவை சிறப்புடைய அல்லாத காலத் தையம் நிகழாதென்பதாம். என்னை? 3"சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப இழிந்துழி யிழிபே சுட்டலான" என்றாராகலின்; அதற்குச் செய்யுள்:- 4"பாரணங் கோதிருப் பாற்கட லீன்றபங் கேருகத்தின் ஓரணங் கோவெற் புறையணங் கோவுயர் பாவலர்க்கு
1. தஞ்சை கோ. செ: 1. 2. பு. வெ. கைக்கிளைப் படலம் செ: 1 3. தொல், பொருள், களவியல்: சூ.8. இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கொண்ட பொருள் வேறு. அவர்கள் உரையை நோக்குக. 4. த. கோ. செ: 2.
|