62

வாரணங் கோடி தருந்தஞ்சை வாணன்றென் மாறைவையை
நீரணங் கோநெஞ்ச மேதனி யேயிங்கு நின்றவரே"

எனவும்,

1"அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு"

எனவும்,

2"தாமரைமேல் வைகிய தையல்கொ றாழ் 3தளிர்க்
காமரு பூங்கணையான் காதலிகொ--றேமொழி
மையம ருண்கண் மடந்தைக
ணைய மொழியா தாழுமென் னெஞ்சே"

எனவும் வரும்.

(4)

துணிவு

121. எழுதிய வல்லியுந் தொழில்புனை கலனும்
வாடிய மலரும் கூடிய வண்டும்
நடைபயில் அடியும் புடைபெயர் கண்ணும்
அச்சமும் பிறவும் அவன்பா னிகழுங்
4கச்சமில் ஐயங் கடிவன வாகும்.

(இ - ம்.) துணிவுநிகழ்தற்கு ஏதுவாவன இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) எழுதிய வல்லி முதலாக அச்சம் ஈறாகச் சொல்லப்பட்ட ஏழும் அவைபோல்வன பிறவுந் தலைமகன்மாட்டு நிகழாநின்ற எண்ணிலா ஐயங்களைப் போக்குவனவாம் என்றவாறு.

'பிறவும்' என்றதனால் நிழல் வியர்வு முதலாயினவுங் கொள்க. என்னை?


1. திருக்குறள், செ: 1081.

2. பு. வெ. கை. ப. செ. 2.

3. 'தாழ்தளிரிற்' காமருவும் வானோர்கள் காதலிகொல்' என்பது பு. வெண்பாமாலையின் பாடம்.

4. அளவு.