66

தலைவியின் எய்தும் புணர்ச்சியின் விரி

127. இரந்துபின் னிற்றற் கெண்ணலும் இரந்து
பின்னிலை நிற்றலும் முன்னிலை யாக்கலும்
மெய்தொட்டுப் பயிறலும் பொய்பா ராட்டலும்
இடம்பெற்றுத் தழாஅலும் வழிபாடு மறுத்தலும்
இடையூறு கிளத்தலும் நீடுநினைந் திரங்கலும்
மறுத்தெதிர் கோடலும் வறிதுநகை தோற்றலும்
முறுவற்குறிப் புணர்தலும் முயங்குத லுறுத்தலும்
புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் பிறவும்
உணர்த்திய தலைவியிற் புணர்ச்சியின் விரியே.

(இ - ம்.) தலைமகளாற் புணரும் புணர்ச்சியின் விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இரந்து பின்னிற்றற்கெண்ணல் முதலாகப் புகழ்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பிறவும் மேற்சொல்லப்பட்ட தலைமகளாற் புணரும் புணர்ச்சியின் விரியாம் என்றவாறு.

அவற்றுள், இரந்து பின்னிற்றற்கெண்ணறகுச் செய்யுள்:

1"தேங்கிய காதர வாதரஞ் செப்பித்தண் செப்பிணைபோல்
வீங்கிய மாமுலை மேவுதும் யாம்விச யக்கொடிமேல்
வாங்கிய சாப முயர்த்தவன் போர்வென்ற வாணன்வையந்
தாங்கிய மாலனை யான்றஞ்சை சூழ்வரைத் தாழ்குழற்கே"

எனவும்,

2"மருந்திற் றீராது மணியி னாகா
தருந்தவ முயற்சியி னகற்றலு மரிதே
தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய
தேனிமிர் நறவின் றேறல் போல
நீதர வந்த நிறையழி துயர
மாடுகொடி மருங்குனின் னருளி னல்லது
பிறிதிற் றீரா தென்பது பின்னின்
றறியக் கூறுது மெழுமோ நெஞ்சே
நாடுவிளங் கொண்புகழ் நடுதல் வேண்டித்தன்
னாடுமழைத் தடக்கை யறுத்துமுறை நிறுத்த


1. த. கோ. செ. 5

2. அ.வி. அகத்திணையியல், 123ஆம் சூ. உரை மேற்கோள்.