பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறைக் குனிதிரை தொகுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பற் பன்மாண் சாயற் பரதவர் மகட்கே" எனவும் வரும். இரந்து பின்னிலை நிற்றற்குச் செய்யுள்: 1"செறிவேழ வெஞ்சிலை வேடஞ்சை வாணன் றிருந்தலர்மே லெறிவேலை வென்றகண் ணென்னுயிர்க்கேவி யிருண்டறல்போல் நெறிவே யலங்கன் முடித்தலை சாய்த்திங்ங னிற்பதுதா னறிவே யறிந்த வுனக்கலர் மாளிகை யாரணங்கே" எனவும், 2"ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்னையர் கோடும் புருவத் துயிர்கொல்வை மன்னீயும் பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து வாடுஞ் சிறுமென் மருங்கிழவல் கண்டாய்" எனவும் வரும். முன்னிலையாக்கற்குச் செய்யுள்: 3"வழுதியர் நாமம் வளர்க்கின்ற வாணன்றென் மாறைவண்டு கொழுதிய லார்செய் குழன்மட வீர்நுங்குற் றேவல்செய்து தொழுதிய லாயத் தொகுதியோ டாடிச் சுனைகுடையா தெழுதிய பாவையைப் போனின்றவாறென் னியம்புமினே" எனவும், 4"ஒள்ளிழை மகளிரொ டோரைபு மாடாய் வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புனையாய் விரிபூங் கான லொருசிறை நின்றோய் யாரை யோநிற் றொழுதனம் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ இருங்கழி மருங்கி னிலைபெற் றனையோ சொல்லுநீ மடந்தை யென்றனெ னதனெதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன பல்லித ழுண்கணும் பரந்தவாற் பனியே" எனவும் வரும்.
1. த. கோ. செ: 6. 2. சிலப். கானல் செ: 19-2. 3. த. கோ. செ: 7. 4. நற்றிணை, செ: 155.
|