68

மெய்தொட்டுப் பயிறற்குச் செய்யுள்:

1"நல்லார் விழிபோ லிருந்து மளியெனு நாமம்பெற்றும்
அல்லார் குழிலி லமர்ந்திருந் தாலம ராரைவெல்ல
வல்லான் வரோதயன் வாணன்றென் மாறை மதுகரங்கா
ணில்லா திடையுமக் கேபழி சால நிலைநிற்குமே"

எனவும்,

2"பிறை நுதலாள் கொங்கைப் பெருக்கத்தாற் றேய்ந்து
குறையு மிடைகண்டுங் கொண்டற்--பொறையளகத்
தண்டே னசையாற் சனநாதன் றொண்டியின்வாய்
வண்டே மகிழ்ந்தேறல் வந்து"

எனவும் வரும்.

பொய்பாராட்டற்குச் செய்யுள்:

3"பருந்தொன்று கூரிலை வேற்படைவாணன் பரிமளப்பூஞ்
செருந்தொன்று சோலைத்தென் மாறையன் னீர்செழுந் திங்களுங்கண்
முருந்தொன்று சோதி முகங்கண்டு நாணி முயன்மறுத்தீர்
மருந்தொன்று நாடியன் றோவட மேரு வலங்கொள்வதே"

4"மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
காதலை வாழி மதி"

எனவும் வரும்.

இடம்பெற்றுத் தழாஅற்குச் செய்யுள்:

5"படம்பட்ட வாளர வல்குலி லேதளை பட்ட நெஞ்சம்
விடம்பட்ட வாள்பட்ட வேதனை தீரவிண் டோய்பொழிலுந்
தடம்பட்ட வாவியுஞ் சூழ்தஞ்சை வாணன் றமிழ்க்கிரிநா
மிடம்பட்ட வார முலைத்தடந் தோய்தற் கிடமிதுவே"

எனவரும்.

வழிபாடு மறுத்தற்குச் செய்யுள்:

"தேறாத தெவ்வென்ற வாணன்றென் மாறைச் செந்தேனருவி
யூறாத காலத்து மூறுதண் சார லொதுக்கிடந்தந்
தாறாத சோகமு மாற்றுதல் வேண்டு மசோகமெய்தி
மாறாத தண்ணளி கூர்மலர் வாண்முக மாதவியே"

எனவரும்.


1. த. கோ. செ: 8.

2. த. கோ. செ: 9.

3. திருக்குறள், 1119.

4. த. கோ. செ: 11.

5. த. கோ. செ: 10.