69

இடையூறு கிளத்தற்குச் செய்யுள்:

1"சிதையா முளரித் திருமா ளிகையிற் சிறந்ததென்றென்
இதயார விந்தத் தினிதிருப் பீரிரு கோட்டொருகை
மதயானை வாணன் வருந்தஞ்சை சூழ்வையை நாட்டுறைவோர்
புதையார் தனமென்ப தோமதர் வேற்கண் புதைத்ததுவே"

எனவும்,

2"சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின்
றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ
கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப்
புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்
றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
கண்ணே கதுவ வல்ல கண்ணா
ரரண்டலை மதில ராகவு முரசுகொண்
டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூட லன்னநின்
கரும்புடைத் தோளு முடையவா லணங்கே"


எனவும் வரும்.

நீடுநினைந் திரங்கற்குச் செய்யுள்:

3"தமிழ்தங் கியதஞ்சை காவலன் வாணன் றடஞ்சிலம்பிற்
குமிழ்தங் கியமதிக் கொம்பரன் னீர்குளிர் வெண்ணிலவூ
டுமிழ்தண் டரளப் பவளச்செங் கேழ்வள்ளத் துள்ளிருக்கும்
அமிழ்தந் தருவதென் றோபெரு வேட்கையென் னாருயிர்க்கே"


எனவும்.

4"தீண்டலு மியைவது கொல்லோ மாண்ட
வில்லுடை 5வீளையர் கல்லிடு பெடுத்த
நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த
புன்கண் மடமா னேர்படத் தன்னையர்
சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக்
குருதியொடு பறித்த செங்கோல் வாளி
மாறுகொண் டன்ன வுண்க
னாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே"


எனவும் வரும்.


1. த. கோ. செ. 12.

2. நற்றினை, செ. 39.

3. த. கோ. செ. 13.

4. குறு. செ. 272.

5. இளையர்.