70

மறுத்தெதிர்கோடற்குச் செய்யுள்:

1"கறையா ரிலங்கிலை வேலன்பர் காமக் கடற்கெதிர்ந்த
நிறையாம் வரம்பினி நிற்பதன் றானிறை நீருலகை
மறையாமல் வன்கலி மாற்றிய வாணன்றென் மாறையினாம்
பொறையார் தவஞ்செய்தி லேநெஞ்ச மேயென் புகல்வதுவே?"

எனவும்,

2"பண்டுநாம், வேறல்ல மென்பதொன் றுண்டா லவனொடு
மாறுண்டோ நெஞ்சே நமக்கு"

எனவும் வரும்.

வறிதுநகை தோற்றற்குச் செய்யுள்:

3"எறிதே னலம்புஞ் சிலம்பினெப் போது மிரந்திவள்பின்
வறிதே திரிந்து மெலிந்தன நாமுள்ள மெல்லியற்குப்
பிறிதேகொ லென்னும் பெருந்தகை தேறப் பெரிதுயிர்த்து
வறிதே முறுவல்செய் தாடஞ்சை வாணன் வரையணங்கே"

எனவும்,

4"அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை
யின்றி யமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய்"

எனவும் வரும்.

முறுவற்குறிப்புணர்தற்குச் செய்யுள்:

5"வின்மலை வேலன்ன நன்னுதல் வாட்கண்ணி

வேட்கையெண்ணாள

என்மலை வேனென்னு மென்னுயிர் தாங்கு

மெதிர்ந்த வொன்னார்

மன்மலை வேழந் திறைகொண்ட சேய்தஞ்சை

வாணன்மஞ்சார்

தென்மலை வேய்நிக ரும்பெருந் தோளி

சிறுநகையே"

எனவும்,

6"முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு"

எனவும் வரும்.


1. த. கோ. செ: 14.

2. கலி. மு. செ: 26.

3. த. கோ. செ: 15.

4. கலி. மு. செ: 10.

5. த. கோ. செ: 16.

6. திருக்குறள், செ: 1274.