முயங்குதலுறுத்தற்குச் செய்யுள்: 1"வானக் கதிரவன் மண்ணக மாதை மணந்ததன்றோ நானக் குழலியை நானின்று பெற்றது நாவலர்க்குத் தானக் களிறு தரும்புயல் வாணன் தமிழ்த்தஞ்சைசூழ் கானக் கடிவரை வாய்விரை நாண்மலர்க் காவகத்தே" எனவும், 2"கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ யைதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோண் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே" எனவும் வரும். புணர்ச்சியின் மகிழ்தற்குச் செய்யுள்: 3"மலைநாடு கொண்ட வழுதிகண் போல்பவன் | வாணனெண்ணெண் | கலைநாடு தஞ்சையர் காவலன் மால்வரைக் | கன்னிபொன்னாண் | முலைநா முயன்று முயங்கின மான்முயன் | றாலினியைந் | தலைநாக நன்மணியும்பெற லாமித் | தரணியிலே" | எனவும், 4"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள" எனவும் வரும். புகழ்தற்குச் செய்யுள்: 5"திரண்மா மரகதச் செய்குன்று காளென்றுஞ் செல்வன நீர் முரண்மா தவங்கண் முயன்றுசெய் தாலு முளரிமங்கை சரண்மாறை வாணன் றமிழ்த்தஞ்சை நாட்டென் றனியுயிர்க்கோர் அரண்மா னனையகண் ணாள்கொங்கை போற லரிதுமக்கே" எனவரும். இவற்றுள் இரந்து பின்னிற்றற்கெண்ணல் முதலாக நீடு நினைந்திரங்கல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதனுள், வழிபாடு மறுத்தல் ஒன்றுமொழித்தல்லதன எட்டும் வேட்கையுணர்த்.
1. த. கோ. செ: 17. 2. குறு. செ: 62. 3. த. கோ. செ: 18. 4. திருக்குறள், செ: 1101. 5. த. கோ. செ: 19.
|