தற்குரியவாம்; வழிபாடு மறுத்தலாய ஒன்றுந் தலைமகள் மறுத்தற்குரித்தாம்; மறுத்தெதிர் கோடலும் வறிதுநகை தோற்றலும் என்னுமிரண்டுந் தலைமகள் உடன்பாட்டிற்குரியவாம்: முறுவற் குறிப்புணர்தலும் முயங்குதலுறுத்தலும் தலைமகள் உடன்பாட்டிற்குரியவாம்; புணர்ச்சியின் மகிழ்தலும் புகழ்தலும் என்னும் இரண்டுந் தலைமகன் கூட்டத்திற்குரியவாம். 'பிறவும்' என்றதனால் 1அணிதலும் கொள்ளப்படும். இலக்கியம் மேலே காட்டப்படும். (11) 2. வன்புறை வன்புறையின் வகை 128. ஐயந் தீர்த்தல் பிரிவறி வுறுத்தலென் றெய்திய வன்புறை யிருவகைத் தாகும். (இ - ம்.) வன்புறையின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட வன்புறை ஐயந்தீர்த்தலும் பிரிவறிவுறுத்தலும் என இரண்டு கூற்றினையுடைத்தாம் என்றவாறு. இக்கிளவி2"தீராத்தேற்றம்" என்பதனாற் கொள்ளப்படும். (12) வன்புறையின் விரி 129. அணிந்துழி நாணிய துணர்ந்துதெளி வித்தலும் பெருநயப் புரைத்தலும் தெய்வத்திறம் பேசலும் பிரியே னென்றலும் பிரிந்துவரு கென்றலும் இடமணித் தென்றலும் என்றிவை யாறும் மடனறத் தெரிந்த வன்புறை விரியே. (இ - ம்.) வன்புறையின் விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதலாக இடமணித்தென்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் தலைமகன் தலைமகளது அறிவின்மை நீங்க ஆராய்ந்து சொன்ன வன்புறையின் விரியாம் என்றவாறு. வன்புறுத்தலான் வன்புறை என்று பெயராயிற்று. அவற்றுள் அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தற்குச் செய்யுள்: 3"நாவியுங் காரகி லாவியுந் தோய்குழ னாணியஞ்சேல் வாவியுஞ் சோலையுஞ் சூழ்தஞ்சை வாணன்றென் மாறைவயற்
(பாடம்) 1. ஏற்புற வணிதலும். 2. தொல். பொருள். களவியல் சூ: 11. 3. த. கோ. செ: 2.
|