73

காவியுஞ் சேலுங் கமலமுங் காட்டுநின் கண்மலரும்
ஆவியும் போலினி யாரணி யாக வணிந்தனனே"

என வரும். அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தற்கு விதி யாதோ வெனின்?

1"முன்புற் றறியா முதற்புணர்ச்சி மொய்குழலை
யின்புற் றணிந்த வியலணியும்-வன்பணியு
நாணேனுந் தொல்லை யணியென்ன நன்னுதலை
........னந்து"

என்னும் பரிபாட்டினுட் செய்யுளாம் எனக் கொள்க.

பெருநயப் புரைத்தற்குச் செய்யுள்:

2"மன்னா வுலகத்து மன்னிய சீர்த்தஞ்சை வாணன்வெற்பில்
என்னாவி யன்ன விவளிடை மேலிணை கொண்டெழுந்த
பொன்னா ணணிகொங்கை போலவண் டீருங்கள் பொய்கையுண்டோ
நன்னா ளரும்பொரு தாளிரண் டீனு நளினங்களே"

எனவும்,

3"கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே"

எனவும் வரும்.

தெய்வத்திறம் பேசற்குச் செய்யுள்:

4"மன்னிய பார்புகழ் வாணன் றென்மாறையின் மாந்தளிர்போன்
மின்னிய மாமை விளர்ப்பதென் னேவிதி கூட்டநம்மிற்
பின்னிய காதல் பிரிப்பவர் யாரினிப் பேரருவி
இன்னிய மாக விளமயி லாடு மிரும்பொழிற்கே"

என வரும்.

பிரியேனென்றற்குச் செய்யுள்:

5"வண்கொடி யேய்மதின் மாறைவரோதயன் வாணனொன்னார்
எண்கொடி யேனெய்த விவ்வண்ண நீயிரங் கேலிரங்கேல்
நுண்கொடி யேரிடை வண்டிமிர் பூங்குழ னூபுரத்தாட்
பெண்கொடி யேபிரி யேன்றரி யேனிற் பிரியினுமே"

எனவும்.


1. பரிபாடல், பக்கம்: 173.

2. த. கோ. செ: 21.

3. குறு. செ: 2.

4. த. கோ. செ: 22.

5. த. கோ. செ: 23.