1"யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதுஞ் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே" எனவும் வரும். பிரிந்து வருகென்றற்குச் செய்யுள்: 2"சென்றே பகைவென்ற திண்படை வாணன் செழுந்தஞ்சைசூழ் நன்றே தருவையை நாடனை யாய்நம தாருயிர்போல் ஒன்றே யென துரை யூங்குயர் சோலையி னூடொளித்து நின்றே வருவலிங் கேவிளை யாடுக நீசிறிதே" என வரும். இடமணித் தென்றற்குச் செய்யுள்: 3"மணிபொன் சொரியுங்கை வாணன்றென் மாறை மருவினர்போல் தணிபொன் சொரியுந் தடமுலை யாயுயர் சந்தமுந்தி அணிபொன் சொரியு மருவியெஞ் சார லகத்தலர்தேங் கணபொன் சொரியுநன் சாரன்மென் காந்தளங் கையகத்தே" எனவும், "நெடுவே றுடக்கிய நீர்க்குமதி காதல் வடிவே றுடக்கிய நீர்மாதோ-நெடுவேய்க் கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரன் மணநாறு நுங்குன்றின் வந்து" எனவும் வரும். இவற்றுள், முன்னைய மூன்றும் ஐயந்தீர்த்தற்குரிய; பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்குரிய எனக்கொள்க. (13) 3. தெளிவு தெளிவு இன்னதென்பது 130. தலைவன் மாற்றந் தலைவி தேற்றந் தெளிவா மென்பர் தெளிந்திசி னோரே. (இ - ம்.) தெளிவு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தலைமகன் சொல்லைத் தலைமகள் தெளிதலைத் தெளிதலென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. அதற்குச் செய்யுள்:
1. குறு. செ: 40. 2. த. கோ. செ: 24. 3. த. கோ. செ: 25.
|