1"எத்துந் தமதுரை தேறிநின் றேனையீங் கேதனியே வைத்தங் ககன்று மறந்துறை யார்வறி யோர்கவர முத்துந் துகிரு மிரங்குந் தரங்க முகந்தெறிந்து தத்துங் கரைவையை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பரே" எனவும், 2"நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்று மென்றோள் பிரிவறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்த லஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே" (14) எனவும் வரும். 4. பிரிவுழி மகிழ்ச்சி பிரிவுழி மகிழ்ச்சியின் விரி 131. செல்லும் கிழத்தி செலவுகண் டுளத்தொடு சொல்லலும் பாகனொடு சொல்லலும் இரண்டும் பிரிவுழி மகிழ்ச்சியின் விரியெனக் கொளலே. (இ - ம்.) பிரிவுழி மகிழ்ச்சியின் விரியுணர்த்துதல் நுதலிற்று.(இ - ள்.) அவ்வாறு அவ்விடத்து நீங்கித் தலைமகள் தன்னைக் காணாமல் தானவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்ற தலைமகன் புணர்ச்சிக் களத்தினின்றும் போகாநின்ற தலைமகளது செலவு கண்டு தன்னெஞ்சொடு கூறலும் பாகனொடு கூறலுமாகிய இவ்விரண்டும் பிரிவுழி மகிழ்ச்சியின் விரியாம் என்றவாறு.இங்குக் கிளவிப்பன்மையின்மையின் வகை இன்றாயிற்று. செல்லுங்கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லற்குச் செய்யுள்: 3"அகிலேந்து கூந்த லொருகையி லேந்தி | யசைந்தொருகை | துகிலேந்தி யேந்துந் துணைச்சிலம் பார்ப்பத் | துளிகலந்த |
1. த. கோ. செ, 26. 2. நற்றிணை: 1. 3. த. கோ. செ, 27.
|