முகிலேந்து பூம்பொழில் சூழ்தஞ்சை வாணன்முந் நீர்த்துறைவாய் நகிலேந்து பூங்கொடி போற்செல்லு மானெஞ்ச நம் முயிரே" எனவும், 1"காணா மரபிற் றுயிரென மொழிவோர் நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே யாஅங் காண்டுமெம் மரும்பெற லுயிரே சொல்லு மாடு மென்மெல வியலுங் கணைக்கா னுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே" எனவும் வரும். பாகனொடு சொல்லற்குச் செய்யுள்: 2"தென்பாற் றிலகமன் னான்றஞ்சை வாணன்றென் | மாறைமுந்நீர் | வன்பாற் றிரண்முத்த வண்டலின் மேல்வரு | மேதமஞ்சி | முன்பார்த்தென் னெஞ்சம் வரும்வழி பார்த்து | முறை முறையே | பின்பார்த் தொதுங்குதல் காண்வல வாவொரு | பெண்ணணங்கே" | என வரும் இவையிரண்டற்கும் இலக்கணவிதி இவையாகக் கொள்க. (15) 5. பிரிவுழிக் கலங்கல் பிரிவுழிக் கலங்கலின் வகை. 132. மருளுற் றுரைத்தல் தெருளுற் றுரைத்தலென் றிருவகைத் தாகும் பிரிவுழிக் கலங்கல். (இ - ம்.) பிரிவுழிக் கலங்கலின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மருளுற்றுரைத்தலும், தெருளுற்றுரைத்தலுமென இரண்டு வகையினை யுடைத்தாம் பிரிவுழிக் கலங்கல் என்றவாறு.
1. தொல், பொருள், களவியல், 10ஆம் சூத்திரவுரையின் மேற்கோள். 2. த. கோ. செ: 28.
|