1இக் கிளவி"பிரிந்தவழிக் கலங்கல்" என்பதனாற் கொள்ளப்பட்டது. பிரிவுழிக் கலங்கலின் விரி 133. ஆய வெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோ வென்றலும் வாயில்பெற் றுய்தலும் பண்புபா ராட்டலும் பயந்தோர்ப் பழிச்சலுங் கண்படை பெறாது கங்குனோ தலுமெனும் ஐந்தும் பிரிவுழிக் கலங்கல்விரி யாகும். (இ-ம்) பிரிவுழிக்கலங்கலின் விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தலைமகளை ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றல் முதலாகக் கண்படை பெறாது கங்குனேர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் பிரிவுழிக் கலங்கலின் விரியாம் என்றவாறு. ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோவென்றற்குச் செய்யுள்: 2"சீயங்கொ லோவெனத் தெவ்வென்ற வாணன்றென் | மாறைவையைத் | தோயங்கொ லோவெனு நேயநம் பால்வைத்துச் | சோலைமஞ்ஞைவ் | யாயங்கொ லோவெனு மாயத்துள் ளாளிவ் | வரிவையென்ன | மாயங்கொ லோநெஞ்ச மேமணம் போலிங்கு | வந்துற்றதே" | எனவும், "மனவே ரல்குன் மடந்தை கூட்டங் கனவே தெரியினும் யாவது நனவே தெரியினு நண்ணலோ வரிதே" எனவும் வரும். வாயில்பெற்றுய்தற்குச் செய்யுள்: 3"பெருமான் மருந்தொன்று பெற்றனம் | யாநெஞ்சம் பேதுறல்பார் | மருமான் வரோதயன் வாணன்றென் மாறை | மணங்கமழ்பூந் |
1. தொல். பொருள், களவியல், சூ: 102. 2. த. கோ. செ. 29. 3. த. கோ. செ: 30
|