78
திருமான் முகமலர்ச் சேயரி பாய்கயல்

சென்றுசென்றவ்

வொருமா னகைமுக மாமல ரோடை

யுலாவருமே"

எனவும்,

"நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும்
பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே
யன்ன தலையளி யுடைமையி
னின்னுயிர்த் தோழி யேந்திழை யிவட்கே"

எனவும் வரும்.

பண்பு பாராட்டற்குச் செய்யுள்:

1"மயலார் களிற்றண்ணல் வாணன்றென் மாறையில்

வாய்ந்தவர்கண்

கயலா மெனிற்கயல் கள்ளங்கொள்ளாகருந்

தாழளகம்

புயலா மெனிற்புயல் போதுகொள் ளாவிப்

புனையிழையார்

இயலா மனைத்தையும் வேறென்ன பேரிட்

டியம்புவதே"

எனவும்,

"குன்றக நாடன் குன்றத்துக் கவாஅற்
பைஞ்சுனை பூத்த பகுவாய்க் குவளையும்
அஞ்சி லோதி யசைநடைக் கொடிச்சி
கண்போன் மலர்த லரிதிவள்
தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே"

எனவும் வரும்.

பயந்தோர்ப் பழிச்சற்குச் செய்யுள்:

2"அணியுஞ் சுடர்விரி சங்குபங் கேருக மாடகமும்
மணியுந் தரமன்னி வாழிய ரோதஞ்சை வாணன் வெற்பில்
தணியுந் தொழிலொழித் தின்பமுந் துன்பமுந் தன்பதமே
பணியும் பணியெனக் குப்பயந் தாளைப் பயந்தவரே"

எனவும்,

3"அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட்
பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற்


1. த. கோ. செ: 31.

2. ஐங்குறு, செ: 269.

3. த. கோ. செ: 32.

4. நற்றிணை, செ: 8.