றிருமணி புரையு மேனி மடவோள் யார்மகள் கொல்லிவ டந்தை வாழியர் துயர முறீஇயின ளெம்மே யகல்வய லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட் கண்போ னெய்தல் போர்விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் றொண்டித் தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே" எனவும் வரும். கண்படை பெறாது கங்குனோதற்குச் செய்யுள்: 1"வாமக் கலையல்குல் வாணுத லார்தஞ்சை வாணன்வெற்பில் நாமக் கலவி நலங்கவர் போது நமக்களித்த காமக் கனலவர் கையகல் காலைக் கடும்பனிகூர் யாமக் கடலகத் துந்தணி யாதினி யென்செய்துமே" எனவும், 2"ஓதமு மொலியோ வின்றே யூதையுந் தாதுளர் கானற் றௌவென் றன்றே மணன்மலி மூது ரகல்நெடுந் தெருவிற் கூகைச் சேவல் குராலோ டேறி யாரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறு மணங்குகால் கிளரு மயங்கிரு ணடுநாட் பாவை யன்ன பலராய் வனப்பிற் றடமென் பணைத்தோண் மணமிகு குறமகள் சுணங்கணி வனமுலை முயங்குத லுள்ளி மீன்கண் டுஞ்சும் பொழுதும் யான்கண் டுஞ்சிலன் யாதுகொ னிலையே" எனவும் வரும். இவற்றுள் ஆயவெள்ளம் வழிபடக் கண்டிது மாயமோ வென்றலாகிய ஒன்றும் மருளுற்றுரைத்தற்குரித்து. ஏனைய நான்குந் தெருளுற்றுரைத்தற்குரியன. இவை ஐந்துகிளவிக்கும் ஈண்டுக் காட்டிய செய்யுளே இலக்கணமாகக் கொள்க. (17)
1. த. கோ. செ: 33. 2. +நற்றிணை, 319.
|