முந்துறக் காண்டற்குச் செய்யுள்: 1"மருவாய நாப்பண் மயிலுரு வாய்நென்னல் வாணன்றஞ்சைத் தருவாய்த் தழைகொய்து தண்புனங் காத்துத் தடங்குடைந்து திருவாய் மலர்ந்து சிலம்பெதிர் கூயின்றொர் தெய்வதப்பெண் உருவா யொருதனி யேநின்ற தாலென் னுயிர்க்குயிரே" என வரும். முயங்கற்குச் செய்யுள்: 2"மானா கரன்றஞ்சை வாணன் வரோதயன் மாறையன்னாள் தானாவி நின்றலர் தாமரை யேயத் தடமலர்வா யானா தொழுகுசெந் தேனல்லி மேவு மரசவன்னம் யானா கிடைப்பது ++வேயின்ன பான்மை யிருவர்க்குமே" என வரும். புகழ்தற்குச் செய்யுள்: ''அரும்பா மளவிற் றனத்தொடொவ் வாயல ராமளவிற் கரும்பா மொழிவதனத்தொடொவ் வாய்களி யானைசெம்பொன் தரும்பாரி வாணன் றமிழ்த்தஞ்சை யான றரி யாரின்முன்செய் பெரும்பாவ மல்லது நீர்நின்ற பேறல்லி பெற்றிலையே'' என வரும். ஆயத்துய்த்தற்குச் செய்யுள்: 3"மேவிக் கலைக்கட லென்புலன் மீனுண்டு மீண்டுவந்தென் ஆவிக் கமலத் தமரன்ன மேநின் னயில் விழிபோல் வாவிக் கயலுக ளுந்தஞ்சை வாணன் வரையினுடன் கூவிக் கயங்குடை நின்குயி லாயங் குறுகுகவே" என வரும். இவற்றுள், தந்ததெய்வந் தருமெனச் சேறலாகிய ஒன்றும் தெய்வந் தெளிதற் குரித்தாம். காண்டலும் முயங்கலும் புகழ்தலுமாகிய மூன்றும் கூடற்குரியவாம். ஆயத்துய்த்தலாகிய ஒன்றும் விடுத்தற்கு உரித்தாமெனக் கொள்க. (19)
1. த. கோ. செ: 35. 2. த. கோ. செ: 36. 3. (பாடம்) 'என்ன பான்மை,' 4. த. கோ. செ: 37. 5. த. கோ. செ: 38.
|