பாங்கன் கழறற்குச் செய்யுள் : 1"தருகற் பகமன்ன சந்திர வாணன் றடஞ்சிலம்பின் முருகக் கடவு ளனையவெற் பாமுகி லும்பிறையுஞ் செருகக் கிளர்வரை வந்தவொர் பேதைக்குன் சிந்தையெல்லாம் உருகக் கலங்கினை நீதகு மோமற் றுனக்கிதுவே" எனவும், 2"பெருவரை மிசையது நெடுவெள் ளருவி முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச் சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப நோதக் கன்றே காமம் யாவதும் நன்றென வுணரார் மாட்டுஞ் சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே" எனவும் வரும். கிழவோன் கழற்றெதிர் மறுத்தற்குச் செய்யுள் : 3"மாலாய் மதம்பொழி வாரண வாணன்றென் மாறையன்னார் சேலார் கருங்கண்ணுஞ் செங்கனி வாயுஞ் சிறியநுண்ணேர் நூலார் மருங்கும் பெருந்தன பாரமு நும்மையன்றி மேலா னவருங்கண் டாலுரை யாரிந்த வீரங்களே" எனவும், 4"அம்ம வாழி கேளிர் முன்னின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ நுண்டாது பொதிந்த செங்காற் கொழுமுகை முண்டகங் கெழீஇய மோட்டுமண லடைகரை பேஎய்த் தலைஇய பிணரரைத் தாழை யெயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇப் புலவுப்பொரு தழித்த பூநாறு பரப்பின் இவர்திரை தந்த வீர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கு நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த வுண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே" என வரும்.
1. த. கோ. செ :42. 2. குறு. செ : 78. 3. த. கோ. செ : 43. 4. அகம். செ : 130.
|