பாங்கன் கிழவோற் பழித்தற்குச் செய்யுள் : 1"சூரார் சிலம்பிற் சிலம்பிமென் னூல்கொண்டு சுற்றவெற்றிப் போரார் களிறு புலம்பிநைந் தாங்கொரு பூவைகொங்கை வாரா லணைப்ப வருந்தினை நீதஞ்சை வாணன்வெற்பா வோராழி சூழுல கத்தெவ ரேநின்னை யொப்பவரே" எனவும், 2"காமங் காம மென்ப காமம் அணங்கும் பிணியு மன்றே நினைப்பின் முதுசுவற் கலித்த முற்றா விளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ ளோயே" எனவும் வரும். கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றற்குச் செய்யுள் : | 3"பொறைகொண்ட தாமரைப் போதன்ன கொங்கையும் | | பொங்கரிசேர் | | கறைகொண்ட வாளன்ன கண்களுங் கொண்டொரு | | கன்னிதெவ்வைத் | | திறைகொண்ட வாணன் செழுந்தஞ்சை சூழுஞ் | | சிலம்பிலின்றென் | | நிறைகொண்ட வாறறி யாதிக ழாநிற்றி | | நீயுநின்றே" | என வரும். பாங்கன் தன்மனத் தழுங்கற்குச் செய்யுள் : 4"சீதள வாரங் கமழ்தஞ்சை வாணன்றென் மாறையன்னாள் காதள வாவெங் கடுவள வாவொளிர் காவியந்தண் போதள வாவிழி யென்னுமென் னாசைப் புறத்தளவா சூதள வாமுலை யென்னுமென் னாமினிச் சொல்லுவதே" என வரும். பாங்கன் தலைவனோ டழுங்கற்குச் செய்யுள் : 5"என்மே லறைவ தியானிங்கு நின்செவிக் கென்சொலெல்லாம் வன்மே லடர்கொங்கை காரண மாத்தஞ்சை வாணன்வெற்பா கன்மே லறைகின்ற மென்முளை போலுங் கடல்வெதும்பிற் றன்மேல் விளாவவுண் டோதரை மேலொரு தண்புனலே" என வரும்.
1. த. கோ. செ : 44. 2. குறு. செ : 204. 3. த. கோ. செ. 45. 4. த. கோ. செ. 46. 5. த. கோ. செ. 47.
|