87

பாங்கன் இறைவியைக் காண்டற்குச் செய்யுள்:

1"கானே யளகங் கரும்புய லேயியல் கார்மயிலே
மானே விழிமுக மாமதி யேதஞ்சை வாணன்வெற்பிற்
றேனேய் தொடை யலச் சேயனையான் சொன்ன சேயிழையாள்
தானே யிவளிது வேயிட மாகிய தண்புனமே"

என வரும்.

பாங்கன் இகழ்ந்ததற் கிரங்கற்குச் செய்யுள்:

2"கொலைகா லயிற்படை நேரியர் கோனகங் கோடவங்கைச்
சிலைகால் வளைத்துத் திருத்திய வாணன்றென் மாறைவெற்பின்
முலைகால் கொளக்கண் டிளைத்த நுண்ணூலிடை முற்றிழைகண்
வலைகால் பிணிப்பவந் தார்வருந் தாரல்லர் மாலுழந்தே"

எனவும்,

3"இரவி னானு மின்றுயி லறியா
தரவுறு துயர மெய்துப தொண்டித்
தண்ணறு நெய்த னாறும்
பின்னிருங் கூந்த லணங்குற் றோரே"

எனவும் வரும்.

பாங்கன் தலைவனை வியத்தற்குச் செய்யுள்:

4"தலங்கா வலன் தஞ்சை வாணன்முந் நீர்பொருந்

தண்பொருந்தத்

திலங்கார வல்வடக் கொங்கைவெற் பாலிணை

நீலவுண்கண்

பொலங்காம வல்லி கடைந்தவப் போது

புடைபெயர்ந்து

கலங்கா திருந்ததெவ் வாறெம் பிரான்றன்

கலைக்கடலே"

எனவும்,

5"தாழை தவழ்ந்துலாம் வெண்மணற் றண்கானன்
மாழை நுளையர் மடமக--ளேழை
யிணைநாடி லில்லா விருந்தடங்கண் கண்டுந்
துணைநாடி னன்றோ மிலன்"

எனவும் வரும்.


1. த. கோ. செ : 52.

2. த. கோ. செ : 53.

3. ஐங்குறு. செ : 173.

4. த. கோ. செ : 54.

5. திணைமா : 45.