பாங்கன் தலைவியை வியத்தற்குச் செய்யுள்: | 1"வெங்கோன் மழைபொழி வானவர் போர்வென்ற | | மீனவர்தஞ் | | செங்கோன் முறைமை செலுத்திய வாணன்றென் | | மாறைவெற்பில் | | நங்கோன் மெலிய நலிகின்ற காமவெந் | | நஞ்சினையிப் | | பைங்கோன் மணிவளை யார்தணி யாரல்லர் | | பார்வை கொண்டே" | எனவும், | 2"துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத | | தோற்ற மாய்வான் | | பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்டாது | | போர்க்குங் கானல் | | நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் | | செய்த | | உறைமலி யுய்யாநோ யூர்சுணங்கு மென்முலையே | | தீர்க்கும் போலும்" | எனவும் வரும். பாங்கன் தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறற்குச் செய்யுள்: 3"வளங்கனி மாறை வரோதயன் வாணன் மலையவெற்பா உளங்கனி காத லுடனின்ற தானின் னுடலமெல்லாங் களங்கனி போலக் கருதிவெண் கோட்டுக் களிறுண்டதோர் விளங்கனி போல்வறி தாநிறை வாங்கிய மென்கொடியே" என வரும். தலைவன் குறிவழிச் சேறற்குச் செய்யுள்: | 4"புறங்கூ ரிருட்கங்குல் போன்றக நண்பகல் | | போன்ற பொங்கர் | | நிறங்கூர் படைக்கண்ணி நின்றன ளேநிழ | | லைச்சுளித்து | | மறங்கூர் களிற்றண்ணல் வாணன்றென் மாறையில் | | வாணுதலாள் | | அறங்கூர் மனத்தரு ளானின்ற தாமென | | தாருயிரே" | என வரும்.
1 த. கோ. செ: 55. 2 சிலப். கானல். செ: 8. 3. த. கோ. செ: 56. 4. த. கோ. செ: 57.
|