தலைவன் தலைவியைக் காண்டற்குச் செய்யுள்: | 1"பாகையுந் தேனையும் போன்மொழி யார்தமிழ்ப் | | பைந்தொடையும் | | வாகையுஞ் சூடிய வாணன்றென் மாறை | | வளமுமவன் | | ஈகையும் போலு மெழிலியை நோக்கி | | யிரங்குபுள்ளுந் | | தோகையும் போனின்ற வாதனி யேயிந்தச் | | சோலையிலே" | என வரும். தலைவன் கலவியின் மகிழ்தற்குச் செய்யுள்: 2"யாரும்பர் தம்பத மென்போல வெய்தின ரிம்பரம்பொன் வாருந் துறைவையை சூழ்தஞ்சை வாணன் மலயவேற்பில் தேருந் தொறுமினி தாந்தமிழ் போன்றிவள் செங்கனிவா யாருந் தொறுமினி தாயமிழ் தாமென தாருயிர்க்கே" என வரும். புகழ்தற்குச் செய்யுள்: 3"தழல்கண்ட தன்ன கலிவெம்மை யாறத்தன் தண்ணளியால் நிழல்கண்ட சந்திர வாணன்றென் மாறை நிழல்பொலியுங் கழல்கண்ட தன்ன கதிர் முத்த மாலிகைக் காரிகைநின் குழல்கண்ட பின்னல்ல வோவற னீருட் குளித்ததுவே" என வரும். தலைவன் தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தற்குச் செய்யுள்: 4"என்கா தலினொன் றியம்புகின் றெனிங் கினிவருங்கால் நின்கா தலியொடு நீவரல் வேண்டு நிலமடந்தை தன்கா தலன் றஞ்சை வாணன்றென் மாறைத்தண் டாமரைவாழ் பொன்காதல் கொண்டு தொழுஞ்சிலம் பாரடிப் பூங்கொடியே" எனவும்,
1. த. கோ. செ: 58. 2. த. கோ. செ: 59. 3. த. கோ. செ: 60. 4. த. கோ. செ: 61.
|