91

(இ - ம்.) பாங்கி மதியுடன்பாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முன்னுறவுணர்தலும், குறையுறவுணர்தலும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலும் என மூன்றுவகையினை உடையது பாங்கிமதியுடன்பாடு என்றவாறு.

அவற்றுள், முன்னுறவுணர்தலாவது : பாங்கி தலைமகளது வடிவு வேறுபாடு கண்டு, அதனானே கூட்டம் உண்மை யறிதல். குறையுறவுணர்தலாவது, தலைமகன் தழையும் கண்ணியும் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பது கண்டு அதனாலே கூட்டம் உண்மையறிதல். இருவருமுள்வழி அவன் வரவுணர்தலாவது, தலைமகளும் தானும் ஒருங்கிருந்துழித் தலைமகன் அவ்வாறு வரக் கண்டு அதனாலே கூட்டம் உண்மை அறிதல்.

(22)

முன்னுறவுணர்தலின் திறம்

139. நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
செய்வினை மறைப்பும் செலவம் பயில்வுமென்


குறையுறவுணர்தலாவது, பாங்கி, தலைவன் தழையும் கண்ணியும் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக் கண்டு, அதனானே கூட்டம் உண்மை அறிதல்.

இருவரும் உள்வழி அவன் வரவுணர்தலாவது : தலைவியும் தானும் ஒருங்கிருந்துழி, தலைவன் அவ்வாறு வரக்கண்டு அதனானே கூட்டம் உண்மை அறிதல் எனத் தஞ்சைவாணன் கோவை உரையாசிரியர் பாங்கி மதிஉடன் பாட்டின் முன்னுரையிற் கூறியவற்றையும், இச் சூத்திரத்தின் விசேடவுரையிற் கூறப்பெற்றவற்றையும் நன்கு நோக்குக.

உறவுணர்தல் வரவுணர்தல் என்பவற்றை உற உணர்தல் வர உணர்தல் எனப் பிரித்து அவற்றுள், உற, வர என்பன காரணப் பொருட்டாகிய செய என் வினையெச்சமாம் என்றேனும்; உறவு உணர்தல், வரவு உணர்தல் எனப் பிரித்து, அத்தொடர்கள் காரணப் பொருட்டாகிய ஆன் உருபு தொக்க தொடர்களாம் என்றேனுங் கொள்க. இங்ஙனங் கொள்ளின் உறவான் உணர்தல், வரவான் உணர்தல் என உருபு கூட்டிப் பொருள் கொள்க. இம் மூன்றினும் கூட்டம் உண்மை என்பதே செயப்படுபொருள் என்க.