92

றிவ்வகையேழினும் ஐயமுற் றோர்தலும்
அவ்வகை தன்னால் ஐயந் தீர்தலும்
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொருள் சொல்லினா டலுமென
முன்னுற உணர்தல் மூன்றா கும்மே.

(இ - ம்.) முன்னுறவுணர்தலின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நாற்ற முதலாகப் பயில்வு ஈறாகச் சொல்லப்பட்ட அவ்வகையுடைய ஏழினானும் பாங்கி ஐயமுற்றாராய்தலும், அவற்றானே ஐயம் தீர்தலும் மெய்யினானும் பொய்யினானும் 1குற்றேவல் தப்பாமல் பலவாய் வேறுபட்ட இருபொருட்பட்ட சொற்களான் ஆராய்தலும் என முன்னுறவுணர்தல் மூவகையாம் என்றவாறு.

என்னை?

2"நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ்
செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும்
புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉ
முணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை
மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது
பல்வேறு கவர்பொரு ணாட்டத் தானும்"

என்றாராகலின். அவற்றுள், நாற்றமாவது, தான் பண்டு பயின்றறியாததொரு நாற்றம். தோற்றமாவது கூட்டத்தாற் பிறந்ததோர் அழகு. ஒழுக்கமாவது, தெய்வந்தொழாமை முதலாயின. உண்டியாவது, பண்டையிற் குறைந்த உண்டி. செய்வினை மறைத்தலாவது, தலைமகள் தான் செய்யுந் தொழிலைப் பாங்கிக்கு மறைத்தல். செலவாவது, ஆயத்தை நீக்கித் தனியே பெயர்தல். பயில்வாவது, எப்பொழுதும் ஓரிடத்தே நிற்றல்.

பாங்கி அவற்றான் ஐயமுற் றோர்தற்குச் செய்யுள்:

3"வண்டலை யாயத் துடனயர்ந் தோவன்றி

வண்டிமிர்பூந்

தண்டலை யாரத் தழைகள்கொய் தோதஞ்சை

வாணன்வெற்பிற்


1. குற்றேவனிலை தப்பாமல்-என்றும் பாடம்.

2. தொல், பொருள், களவியல், சூ: 23.

3. த. கோ. செ: 63.