புண்டலை வேலினுங் கண்சிவப் பாரப் | பொலஞ்சுனைத்தேன் | கொண்டலை நீர்குடைந் தோவிவள் மேனி | குழைந்ததுவே" | எனவும், 1"கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலும் நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோள் மடந்தை யாங்கா யினள்கொ லென்னுமென் னெஞ்சே" எனவும் வரும். பிறவுமென்ன. ஐயந் தீர்தற்குச் செய்யுள்: 2"திளைக்குந் திரைமே லுனக்குமுன் றோன்றலிற் | செம்பொன்வெற்பை | வளைக்கும் பிரான்முடி வைகுத லாற்றஞ்சை | வாணன் மண்மேல் | விளைக்கும் புகழ்போல் விளங்குத லாற்செக்கர் | விண்பிறைகார் | தளைக்குங் குழற்றிரு வேதொழ வேதகுந் | தன்மையதே" | எனவும், 3"முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே யின்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண்-மன்னும் பொருகளிமால் யானைப் புகார்க்கிள்ளி பூண்போற் பெருகொளியால் மிக்க பிறை" எனவும் வரும், பிறவுமன்ன. மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலுட் சுனைநயப்புரைத்தற்குச் செய்யுள்: 4"பூட்டிய வார்சிலை வீரரை வென்றெப் பொருப்பினுஞ்சீர் தீட்டிய வாணன்றென் மாறையன் னீரிதழ்ச் செம்மையுமை
1. தொல், பொருள், களவியல், 23ஆம் சூ. உரைமேற்கோள். 2. த. கோ. செ: 64. 3. தொல், பொருள், களவியல், 23.ஆம் சூ. உரைமேற்கோள். 4. த. கோ. செ: 65.
|