பூட்டிய வாளின் கருமையுந் தான்கொண் டுமக்கிங்ஙனே சூட்டிய வாறுநன் றான்முல்லை மாலை சுனைப்புனலே" என வரும். சுனைவியந்துரைத்தற்குச் செய்யுள்: 1"மறலா யெதிர்ந்த மறமன்னர் வேழ மலையெறிவேல் திறலார் முருகன் செழுந்தஞ்சை வாணன்றென் மாறைவையை யறலார் குழலாய் நுதற்குறு வேர்வு மழகுநின்போற் பெறலா மெனிற்குடை வேனடி யேனும் பெருஞ்சுனையே" எனவும், 2"பையுண் மாலைப் பழுமரம் படரிய நொவ்வுப் பறைவாவ னோன்சிற கேய்க்கு மடிசெவிக் குழவி தழீ இப் 3பையாந் திடுகுகவுண் மடப்பிடி யெவ்வங் கூர வெந்திற லாளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கே முருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங் கடுங்கண் யானை காலுற வொற்றலிற் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேய நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை" 4"தோளா ரெல்வளை தளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்கோ தோழி வரைவயிறு கிழித்த சுடரிலை நெடுவேற் றிகழ்பூண் முருகன் றீம்புன லலைவாய்க் கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் களித்த வொண்பொறி மஞ்ஞை போல்வதோர் கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே" எனவும் வரும். தகையணங்குறுத்தற்குச் செய்யுள்: 5"குவளை சிவந்து குமுதம் வெளுத்த குறையல்லவேல் அவளை மறைத்துன்னைக் காட்டலு மாமலர்த் தேன்குதிக்கத்
1. த. கோ. செ: 66. 2. தொல். பொருள். களவியல், 23ஆம் சூ. உரைமேற்கோள். 3. பெயர்தந்து என்றும் பாடம். 4. (பாடம்) 'கோனே ரெல்வளை தெளிர்ப்ப'. 5. த. கோ. செ: 67.
|