வரைத்தாழ் சிலம்பினும் வாழ்பதி யீதென்று வஞ்சியன்னீர் உரைத்தா விழிவதுண் டேற்பெய ரேனு முரைமின்களே" எனவும் வரும். கெடுதி வினாதற்குச் செய்யுள்: 1"தண்பட்ட மேவும் வயற்றஞ்சை வாணன் றமிழ்ச்சிலம்பிற் பண்பட்ட தேமொழிப் பாவையன் னீர்பனை பட்டகையும் மண்பட்ட கோடும் மதம்பட்ட வாயும் வடிக்கணைதோய் புண்பட்ட மேனியு மாய்வந்த தோவொரு போர்க்களிறே" எனவும், "சீத விரைக்கனகச் செந்தா மரைப்பொகுட்டு மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப் பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன் கருதாரி லிங்கோர் களிறு" எனவும் வரும். ஒழிந்தது வினாதற்குச் செய்யுள்: 2"வனமார் குடிஞைப் பகைக்குர லாமென வாணன் றஞ்சைப் புனமார் குளிரிப் புடைப்பொலி யாற்கிள்ளை போயினமீண் டினமா மெனவந்திவ் வேனலெல் லாம்வௌவு மென்பதற்கோ கனமா நறுங்குழ லீர்மொழி யாதொழி காரணமே" என வரும். பிறவுமன்ன, 'யாரே இவர் மனத்து எண்ணிய துயா 'தெனத் தேர்தற்குச் செய்யுள்: 3"தரையார வண்புகழ் தேக்கிய வாணன் றமிழ்த்தஞ்சைசூழ் வரையாது நும்பதி யாதுநும் பேரென்பர் வார்துளிக்கார் புரையானை யம்பொடு போந்ததுண் டோவென்பர் பூங்கொடியீர் உரையாத தென்னென்ப ராலென்கொ லோவிவருட்கொண்டதே" எனவும், "கையது செயலையந் தழையே வினாய தைய புண்வாய் மாவே கைவிட் டகலா னம்மவிவ் வகன்புனந் தகையோ னுள்ளிய தறிதலு மரிதே" எனவும் வரும்.
1. த. கோ. செ: 72. 2. த. கோ. செ: 73. 3. த. கோ. செ: 74.
|