98

எண்ணந் தெளிதற்குச் செய்யுள்:

1"யாரே யிவரென் றறிகின்றி லேமெதிர்ந் தாரைவென்று
வாரேய் கழற்புனை வாணன்றென் மாறை வரையுறைவீ
ரூரே தெனமுன் வினாவிப்பின் வேறொன் றுரைப்பதெல்லாம்
நேரே யிவள்பொருட் டாலென்று தோன்றுமென் னெஞ்சினுக்கே"

எனவும்,

2"பூத்த வேங்கை வியன்சினை யேறி
மயிலின மகவு நாட
னன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே"

எனவும் வரும்.

இவையெல்லாம்:

3"பெட்டவாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்
ஊரும் பேருங் கெடுதியும் பிறவு
நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித்
தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி
குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்"

என்பதனால் வந்தன.

(24)

இருவருமுள்வழி அவன் வரவுணர்தலின் திறம்.

141. கையுறை யேந்திவந் தவ்வகை வினாவுழி
எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும்
மதியி னவரவர் மனக்கருத் துணர்வுமென்
றிருவரு முள்வழி யவன்வர வுணர்தல்
ஒருமூன் றாகுந் தெரியுங் காலே.

(இ - ம்.) இருவருமுள்வழி அவன் வரவுணர்தலின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) இருவருமுள்வழி அவன் வரவுணர்தல் என்பது தலைமகன் தழையும் கண்ணியும் ஏந்தி முன்போல ஊர் பெயர் முதலியன வினாவினவிடத்துத் தோழி அதற்கெதிர்மொழி


1. த. கோ. செ: 75.

2. தொல். பொருள். செய்யுளியல், 100ஆம் சூ. உரையின் மேற்கோள்.

3. தொல், பொருள், களவியல், சூ: 11.