கொடுத்தலும் இறைவனை நகுதலும் மதியினின் அவரவர் மனக்கருத்துணர்தலும் என ஒரு மூன்றாகும் ஆராயுங் காலத்து என்றவாறு. கையுறை யேந்தி வருதற்குச் செய்யுள்: 1"தண்டா மரைமலர்ப் பொன்னையும் பார்மங்கை தன்னையும் போல் வண்டார் குழன்மட வார்மணந் தார்சென்று வாணன்றஞ்சை நுண்டா தணிபொங்கர் நீழலின் கீழந் நுடங்கிடையார்க் கண்டா தரவையெல் லாஞ்சொல்ல வேநல்ல காலமிதே" என வரும். தலைவன் அவ்வகை வினாதற்குச் செய்யுள்: 2"வல்லா ரிளங்கொங்கை வஞ்சியன் னீர்தஞ்சை வாணனைக்கண் டொல்லார் களத்தி னுடைந்தது போல வொருகலைபோர் வில்லார் கணைதைப்ப மெய்சோர்ந் தினம்விட்டு வெய்துயிர்த்துப் புல்லார் வதுமின்றி யேவந்த தோநும் புனத்தயலே" என வரும். பிறவுமன்ன, பாங்கி எதிர்மொழி கொடுத்தற்குச் செய்யுள்: 3"வாக்குந் திறனு மதனையொப் பீர்தஞ்சை வாணன் மஞ்சு தேக்குங் குடுமிச் சிறுமலைக் கேதிரி கோட்டிரலை கோக்குஞ் சரமுங் குருதியுஞ் சோரக் கொடிச்சியரேங் காக்கும் புனமருங் கேதனி யேவரக் கண்டிலமே" எனவும், 4"வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின் வாங்கமை மென்றோட்குறவர் மகளிரேஞ் சோர்ந்து குருதி யொழுகமற் றிப்புனத்தே போந்தில வைய களிறு" எனவும் வரும். பாங்கி இறைவனை நகுதற்குச் செய்யுள்: 5"மைவா ளிலங்குகண் மங்கைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பில் இவ்வாளி மொய்ம்பரின் றெய்தமெய்ம் மானிள மாந்தளிரின் செவ்வாளி யுங்கொண்டு சேட்சென்ற தாலன்று சீதைகொண்கன் கைவாளி யுங்கொண்டு போனபொய்ம் மானினுங் கள்ளத்ததே".
1. த. கோ. செ: 76. 2. த. கோ.77. 3. த. கோ. செ: 78. 4. திணைமொழி ஐம்பது, செ: 9. 5. த. கோ. செ: 79.
|