70முன்னுரை

கேட்போர்   என்பதற்கு   இந்நூலைப்   பாடங்   கேட்போர்   எனச்
சிவஞானமுனிவர்  வடநூற் கருத்தை மனத்துட் கொண்டு கூறுவார். அதற்கு
அவர்  கூறும்  ஏது, கேட்டோர் என்னாது கேட்போர் என எதிர்காலத்தாற்
கூறியதே  என்பார்.  யாதொரு  பாயிரத்தும் கேட்போர் இத்தகையார் என
எவரும்    கூறாமையானும்    காலத்தான்    முற்பட்ட   இப்பாயிரத்துள்
அதங்கோட்டாசாற்கு  அரில்தபத்  தெரிந்து எனக் கேட்டோரையே விதந்து
கூறியிருப்பதனானும்  இதுவே  இலக்கியமாகப் பின்னர்ப் பாயிர இலக்கணம்
அமைக்கப்பட்டமையானும்   என்ப,   என்மனார்   என்றாற்போல  இறந்த
காலத்தை    எதிர்காலத்தாற்    கூறுதல்    இலக்கண   வழக்காதலானும்
அம்மரபுபற்றிக்   கேட்போர்   எனக்  கூறப்பட்டது  எனக்  கொள்ளுதல்
நேரிதாகும் என்க.
 

பாயிர உரை முற்றியது