‘சார்ந்து வரல் மரபின்’ என்றதனான், அகரமுதல் னகர இறுவாயாகியவை தனித்துவரல் மரபின என்பது உணர்த்தப்பட்டது. ‘‘அலங்கடை’’ என்னும் வினையெச்சம் ஈண்டு, அல்லாமல் என்னும் பொருட்டாய் நின்றது. ‘என’ என்பது சிறப்புணர்த்தி நின்றது. சிறப்பாவது தலைமைத்தன்மை. மொழிப் பொருளுணரும் இலக்கியப்பயிற்சியுடையாரை நோக்கி இருவகைவழக்கும் உணர்த்துவதே இலக்கணமாகலின், அகர னகரங்களின் இடை நிற்பனவற்றை மாணாக்கர் உணர்வராதலின், முதலும் ஈறுங்கூறி, ஏனையவற்றைக் கொள்ள வைத்து, மேற்கூறப்படும் இலக்கணங்களான் முறையை உய்த்துணரவைத்தார். |
எழுத்து என்பது சொல்லின் முடியும் இலக்கணத்ததாய் நிற்றலானும் அது தொல்லோரிட்ட குறியீடாகலானும் எழுத்தாவது இன்னது என மிகைப்படக் கூறாராயினார். “மொழிமுதற் காரணமாம் அணுத்திரள் ஒலிஎழுத்து’’ என்பதும், ‘‘எழுதப் படுதலின் எழுத்து’’ என்பதும், குன்றக்கூறலாம். என்னை? முன்னது வரிவடிவத்தையும் பின்னது ஒலி உருவையும் சுட்டாமையான் என்க. |
சூ. 2: | அவைதாம் |
| குற்றிய லிகரம் குற்றிய லுகரம் |
| ஆய்தம் என்ற |
| முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன |
(2) |
க - து: | மேலைச்சூத்திரத்துச் ‘சார்ந்துவரல் மரபின’ என்றவற்றை விரித்துப் பெயரும், முறையும், இயல்பும் கூறுகின்றது. ‘ஒருபுடைச்சேறல்’ என்னும் உத்தியான், அவைதாம் என்னும் கூன் ‘சார்ந்து வரல் மரபின‘ என்றதனைத் தழுவி நின்றது. |
பொருள்:சார்ந்து வரல் மரபினையுடைய அவைதாம் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பால் ஒலிப்பியல்புடையதும் ஆகிய மூன்றும் மேற்கூறப்பெற்ற முப்பது எழுத்தொடு ஒருபுடையாக ஒத்த தன்மையன என்று கூறுவர் ஆசிரியர். |
‘என்ப’ என்றது அதிகார முறைமை என்னும் உத்தியான் கூட்டிக் கொள்ளப்பெற்றது. சார்பெழுத்துக்களின் பண்பு புலப்பட வேண்டி விரித்துக்கூறினார். பண்பாவது குன்றிநிற்கும் இயல்பும், முப்பாலாக ஒலிக்கும் இயல்புமாம். ‘புள்ளியும்’ என்னும் உம்மை எண்ணும்மை. புள்ளி என்பது ஒலிக்கும் இயல்பினைச் |