இயற்கையும் செயற்கையுமாதல் பற்றி இரண்டு மேற்கோள் கூறினார். மற்று, முன்னையது கால அளவையும் பின்னையது ஓசையளவையும் குறிக்கும் என்பார் ஒருசாரார். இங்ஙனம் இசையளவினை மாத்திரை எனக் குறியீடு செய்தது, பின்னர் ஆளுதற் பொருட்டென்க. மாத்திரை என்பது மா-(திறம்) திரம்-என்பவை இணைந்ததோர் ஒட்டுப் பெயர். மா-அளவு திரம்-நிலை |
| சூ. 8: | ஒளகார இறுவாய்ப் |
| பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப |
(8) |
க - து: | மேற்கூறிய குறிலும் நெடிலுமாகிய எழுத்துக்களைத் தொகுத்து அவற்றிற்குப் பொதுக்குறியீடு கூறுகின்றது. |
பொருள்: அகரமுதல் ஒளகார இறுவாயாக உள்ள எழுத்துப் பன்னிரண்டும் உயிர் எனப் பெயர்பெறும் என்று கூறுவர் ஆசிரியர். |
அகரமுதல் என்பது முதற்சூத் திரத்தினின்று தந்துரைக்கப் பெற்றது. ‘‘பன்னிருகையும் பாற்பட இயற்றி’’ என்புழிப் போல முற்றும்மைமாறி நின்றது. இவற்றை ‘‘ஆவி’’ எனப் பெயரிட்டுக் கூறுதல் பிறழ்வுணர்ச்சியாகும். உயிர் போறலின் உயிர் எனப்பட்டது என்பதும், அஃது உவம ஆகுபெயர் என்பதும் அத்தகையனவேயாம். உயிர்-(உய்+இர்) உயிர்த்தலை உடையது என்பது இதன்பொருள். (பிறவிளக்கங்களை எழுத்துக்களின் குறியீட்டு விளக்கம் என்னும் தனிக்கட்டுரையிற் கண்டு கொள்க.) |
| சூ. 9: | னகர இறுவாய்ப் |
| பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப |
(9) |
க - து: | தனித்துவரல் மரபினவாய முப்பஃதுள் உயிர் எழுத்துக்கள் தவிர்ந்த ஏனையவற்றிற்குரிய தொகையும், பொதுக்குறியீடும் கூறுகின்றது. |
பொருள்: ககரமுதல் னகர இறுவாயாக உள்ள எழுத்துப் பதினெட்டும் மெய்யென்னும் பெயர் பெறும் எனக் கூறுவர் புலவர். “அகர முதல் னகர இறுவாய்” (சூ-1) என்புழிச்சார்ந்துவரல் மரபினையுடைய மூன்றற்கும் இடங்கூறாமையின் அவை இடையே நிற்குங்கொல் என்னும் ஐயம் நீங்கவும் அவை மெய்யெழுத்துக்களின் பின்னாக எண்ணப்படுதல் முறை என்பது தோன்றவும் ‘‘னகர இறுவாய்’’ என்று கூறிக் ககரமுதல் என்பதை உய்த்துணர வைத்தார். |