நூன்மரபு83

உந்த   அரைமாத்திரையளவு  ஒலித்தலும்,  உயிரியைய  இசைத்தலுமாகிய
மூன்று நிலைமைகளை உடையதாகலின்  என்க.  அன்றியும்  இவ்வாசிரியர்
மெய்யெழுத்திற்குக்கூறும் இலக்கணங்களைச் சார்பெழுத்திற்கும் ஏற்றிக்கூறும்
மரபினை மேற்கொண்டாராதலின் ‘‘மெய்யே அரையள புற்றொலிக் கும்மே’’
என்றாற்போலக்கூறின்,       இதன்பின்னர்           மாட்டெறியப்படும்
சார்பெழுத்துக்கட்கும் அவ்விதி முழுதும்  எய்தும், எய்தின் ஆய்த எழுத்து
யாண்டும்   புள்ளியாகவே  (ஒலிப்புற்றே)   வருதலின்   ஆய்தம்   என்ற
முப்பாற்புள்ளி  என  முன்பு  விதந்துகூறப் பட்டமையான்,  மீண்டுங்கூறின்
அது     கூறியது     கூறலாய்      முடியுமாதலானும்,    குற்றியலிகரம்
உயிரைமேவுதலின்மையின் மாறுகொளக் கூறலாய் முடியுமாதலானும் என்க.
 

ஒப்பக்கூறல் என்னும்  உத்தியான் அகரம்  ஊர்ந்த உயிர்  மெய்க்கும்,
அரையளவு  ஒலிக்கும்  மெய்க்கும்  வேறுபாடு தோன்றப்   புள்ளி (கீற்று)
அடையாளம் வரிவடிவின்கண் எழுதிக் கொள்ளப்பெறும்.
 

சூ. 16: 

‘‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’’

(16)
 

இஃது  உரையாசிரியன்மார்   கொண்ட  பிழையான  பாடம்.  இந்நூல்
நெறிக்கியைந்த பாடம்
 

இகர உகரத் தியற்கையு மற்றே
 

க-து:
 

மேற்கூறிய   மெய்யெழுத்தின்   இயல்பினைக்   குற்றியலிகரமும்
குற்றியலுகரமும் பெறுமென்கின்றது.
 

பொருள்: சார்பெழுத்து மூன்றனுள் ‘‘முப்பாற்புள்ளி’’ என ஓதப்பெற்ற
ஆய்தம்  தவிர்ந்த  ஏனைய   குற்றியலிகரம்-குற்றியலுகரம்  ஆகியவற்றின்
இயல்பும் மெய்யெழுத்திற்குக்கூறிய அவ்வாறேயாம்.
 

அஃதாவது இவையும்  அரைமாத்திரை அளவு புள்ளி பெற்று ஒலிக்கும்
என்றவாறு.  வரிவடிவின்கண் அடையாளம்  செய்து  கோடல் இவற்றிற்கும்
ஒக்கும்.
 

எ - டு :நாகியாது-கேண்மியா எனவும், அரசாட்சி நாடு எனவும் வரும்.
 

‘‘அவ்வியல்   நிலையும்   ஏனைமூன்றே’’   என்பது   அதிகாரப்பட்டு
வருதலின் இகர உகரமென வாளா கூறினார். இவ்வாறே,
 

‘‘யகரம் வரும்வழி இகரங் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது’’