என்றது ; மெய்யெழுத்துக்கள் தம்மைச்சுட்டி உணர்த்த வருமிடத்து அ என்னும் சாரியை இடைச்சொல்லைப்பொருந்தியே இயங்கும் என்றவாறு. |
எ - டு : வல்லெழுத்தென்ப கசடதபற எனவரும். ஈண்டுக் கசடதபற என்பவை உயிர்மெய்யை உணர்த்தாமல் இக், இச், இட், இத், இப், இற் என்னும் புள்ளி மெய்யை உணர்த்தி நின்றன. |
இச்சூத்திரம் தனியெழுத்துப்பற்றிய இலக்கணமாயினும் அவை அகரமாகிய சாரியை இடைச்சொல்லொடு கூடி, மொழித் தன்மையுற்றுப் பிறபொருள் தருதலின் ஈண்டுக் கூறப்பட்டதென்க. |
| ‘‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருள் |
| சுட்டுதற் கண்ணேயாம் சொல்’’ |
என்பதனான் எழுத்திற்கும் சொல்லிற்கும் வேற்றுமையறிக. |
அகரம் சாரியையாங்கால் எழுத்தாகாது இடைச்சொல்லாகுமென்க. |
| சூ. 47: | தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும் |
| மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை |
(14) |
க-து: | நூன்மரபின்கண் உயிர்மெய்க்கண் நிற்கும் மெய்யொலிகளின் மயக்கங் கூறிய முகத்தான் இன்னபுள்ளி முன்னர் இன்னமெய்வருதற்கியலும் என மொழி நிலையும் உணர்ந்து கொள்ள வைத்தமையான் அம்மெய்கள் அகரமொடு சிவணித் தம்மை உணர்த்த வருங்கால் அம்மரபிற்றிரிந்துவரினும் இழுக்காகாதென மெய்கள் உடன்நிற்கும் நிலைபற்றியதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய மெய்களின் தன்மை பற்றிய இலக்கணங் கூறுமிடத்துப் பதினெட்டு எழுத்துக்களும் நூன்மரபிற் கூறியாங்கு நிற்கும் நிலையின் மாறுபடுதல் குற்றமில்லை. |
எ - டு: | ‘‘அவற்றுள், லளகான் முன்னர் யவவுந் தோன்றும்’’ |
| ‘‘வல்லெழுத் தியையின் டகார மாகும்’’ எனவரும். |
இவற்றுள் ளகரப்புள்ளியொடு இணைந்து நிற்றற்கேலாத லகரமும், னகரப்புள்ளியொடு நிற்றற்கேலாத டகரமும் தம்மை உணர்த்த வந்தவழி இணைந்து நிற்குமாறு கண்டுகொள்க. |
மானம் என்பது மன் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்தசொல். (மன்"மான் + அம் = மானம். மன் = கழிதல்" போக்குதல்) இதனை ஆனம் எனப்பிரித்து அஃது ஹானம் என்னும் வடமொழித் திரிபெனமயங்குவாரும் உளர். |