சூ. 59: | பன்னீ ருயிரும் மொழிமுத லாகும் | (26) | க-து: | உயிரும், மெய்யும் சார்புமாகிய எழுத்துக்கள் தனிமொழிக்கண் முதற் கண்ணும் இறுதிக்கண்ணும் நிற்கும் முறைமைபற்றிக் கூறத்தொடங்கி இச்சூத்திரத்தான் உயிர்எழுத்துப் பன்னிரண்டும் மொழிமுதற்கண்வரும் என்று கூறுகின்றார். | மூவகைமொழிகளுள் ஓரெழுத்தொருமொழிகள் தாமே மொழியாகி நிற்றலின் அவை, உயிரெழுத்தாயின் புணர்மொழியிடத்து நிறுத்தசொல்லாக வருங்கால் ஈறாகவும் குறித்து வருகிளவியாக வருங்கால் முதலாகவும் கொள்ளப்படும். உயிர்மெய்யெழுத்துக்கள் ஓரெழுத்தொருமொழியாக நிற்குமிடத்து மெய்ம் முதலாகவும் உயிரீறாகவும் கொள்ளப்படும். இதனை, ‘உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே’ என்பதனான் அறியலாம். | பொருள்:‘ஒளகார இறுவாய்’ எனப்பெற்ற உயிரெழுத்துப் பன்னிரண்டும் மொழிக்கு முதலாக வருதற்காகும். | எ - டு : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என நெட்டெழுத்து ஏழும் (ஒள=சுருங்கு) தனித்துவந்தன. ஆவி, ஈகை, ஊழி, ஏணி, ஐயை, ஓசை, ஒளவை என ஈரெழுத்தொருமொழிக்கண்ணும் ஆடவர், ஈதல், ஊடல், ஏற்றம், ஐயன், ஓங்கல், ஒளவியம் எனத் தொடர் மொழிக்கண்ணும் வந்தன. | ‘‘குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே’’ என்றதனான் சிறுபான்மை அ, இ, உ இம்மூன்றும் தனித்துச்சுட்டி வரும். அடை, இலை, உடை, எரி, ஒளி எனவும் அரசன் - இரவலன் - உலகம் - எழில் - ஒற்றன் என ஏனைய இருவகை மொழிகளுள் வரும். இவை நால்வகைச் சொற்களினும் ஏற்ற பெற்றிவரும். | | சூ. 60: | உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா | (27) | க-து : | மெய்யெழுத்துக்கள் மொழிமுதலாதற்கண் எய்தும் விதி கூறுகின்றது. | பொருள்: மெய், புள்ளி, உயிர்மெய் என்னும் மெய்யெழுத்து நிலை மூன்றனுள் உயிர்மெய்யல்லாத ஏனை மெய்யும், புள்ளியும் மொழிக்கண்முதலாக வாரா. எனவே உயிர்மெய்யாயே வரும் என்றவாறு. | உயிர்மெய்யே மொழி முதலாகும் எனக்கூறாமல், அல்லன ஆகா என எதிர்மறை வகையாற் கூறியதன் காரணம், உயிர்மெய் என்பது மெய்யின் ஒருநிலையே என்பதைப் புலப்படுத்தவும், உயிர்மெய்எழுத்து எண்ணுதல் வகையான் ஒன்றேயாயினும், பிற எழுத்தொடு புணருமிடத்து ஒலிக்கூறுபாட்டான் இரண்டாகப் |
|
|