சைனம்-சயினம், சையம், சௌரியம் எனச்சிதைந்து வரும் வடசொற்கள் இயைந்தன அன்மையின் கொள்ளப்பெறா என்க. |
| சூ. 63: | உஊ ஒஓ என்னும் நான்குயிர் |
| வஎன் எழுத்தொடு வருதல் இல்லை |
(30) |
க-து: | வகரமெய் எட்டு உயிரிசைகளொடு கூடி உயிர்மெய்யாய் வருமென்கின்றது. |
பொருள்: வகரமென்னும் மெய்யெழுத்து உஊஒஓ என்னும் நான்கு உயிரிசைகளொடு கூடிமொழிக்கு முதலாக வருதலில்லை. ஏனையெட்டொடும் கூடிவரும் என்றவாறு. ஒடுவை உயிரொடு கூட்டுக. |
எ - டு: வளை, வானம், விரல், வீடு, வெள்ளம், வேந்தன், வையம், வௌவுதல் எனவரும். |
| சூ. 64: | ஆஎ, |
| ஒஎனும் மூவுயிர் ஞகாரத் துரிய |
(31) |
க-து: | ஞகரமெய் மூன்று உயிரிசைகளொடு கூடிவரும் என்கின்றது. |
பொருள்: ஞகாரம் என்னும் மெய் மொழிமுதலாதற்கு ஆ, எ, ஒ என்னும் மூன்று உயிரோசைகளும் உரியவாம். |
ஞகாரத்‘துரிய’ எனவே உரிமையின்றி நகரமெய்யின் திரிபாக வரும் ஞகரத்திற்கு அகர இகர ஏகாரங்கள் சிறுபான்மை உரியவாதல் கொள்க. |
எ - டு: ஞாலம், ஞெகிழி, ஞொள்கல் எனவரும். நகரத் திரிபாகிய ஞகரம்; (நரல) ஞரல (நமன்) ஞமன் (நிமிரு) ஞிமிரு (நேயம்) ஞேயம் ‘ஞிமிறு’ வண்டாயின் ‘‘கடிசொல்லில்லை’’ என்பதனாற் கொள்க. ஞமலி=நாய். |
சூ. 65: | ஆவோ டல்லது யகர முதலாது |
(32) |
க-து: | யகரமெய் மொழி முதலாமாறு கூறுகின்றது. |
பொருள்: யகரமெய் ஆ என்னும் உயிரிசையோடல்லது ஏனைய உயிரிசைகளொடு கூடிமொழி முதலாகாது. எ - டு யா, யாழ், யானை, யாங்கு எனவரும். ‘யவனர்’ என்பது திசைச் சொல். யவன் என்பது யாவன் என்பதன் விகாரம். இனி, யூபம் என்னும் “எழுத்தொடு புணர்ந்த’’ வடசொல் புறனடையாற் கொள்ளப்படும். யுகம், யூகம், யோகம், யௌவனம் முதலியவை இயையாது சிதைந்தனவாதலின் கொள்ளப்பெறா என்க. |