xviii
 

இக்கருத்துக்கு ‘ஏனை  வகரம்  இன்னொடு  சிவணும்’  (நூ. 184) என்பதும்
அரணாகிறது.
 

உயிர்மயங்கியல்:-
 

நூ.221:  வாழிய  என்பது  செய்க  என்கிற  கிளவியாகிய  ககர  ஈற்று
வியங்கோளே  என்ற   செய்தி   விரிவாக  விளக்கப்பட்டுள்ளது.  நூ.228: ‘நிலாவென்கிளவி  அத்தொடும்  சிவணும்’  என்ற  பாடத்தால்  மிகையாற்
கொள்ளப்பட்ட செய்திகள் நூற்பா வாயிலாகவே பெறப்பட்டுள்ளன. நூ.259:
அதாஅன்று என்ற சொல்நிலை ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது.
 

புள்ளிமயங்கியல்:-
 

நூ. 309: முரண்கடுமை - முரட்கடுமை. பொருள்வேறுபாடு  சுட்டியதிறம்
நன்று.  நூ. 316:  இலம்பாடு  என்ற  உரிச்சொல்  பற்றிய  பல செய்திகள்
தெளிவாக்கப்பட்டுள்ளன.   நூ. 318:    எண்ணுப்பெயர்  அடையடுத்துழிப்
பொருள் வேறாகி நிற்கும்  திறன் நுட்பமாக  விளக்கப்பட்டுள்ளது. நூ. 351:
தான், பேன், கோன் என்ற   சொற்கள் தாயன்,   பேயன், கோவன்  என்ற
சொற்களின்   இடைக்குறை   என்ற   ஆராய்ச்சி நுட்பமானது.   நூ. 359:
‘அதன்வினை   கிளப்பின்’     என்ற     பாட     வேறுபாடு    மிகப் பொருத்தமாவதனொடு  பலவித ஐயங்களையும் அகற்றுகிறது. இப்பாடத்தை
ஆசிரியர் விரிவான விளக்கத்தொடு நிறுவிய திறன் நயக்கத்தக்கது.
 

குற்றியலுகரப் புணரியல்:-
 

நூ.  472:  ‘ஈறுசினை  ஒழியா’  என்ற  பாடம்  ஐயமும்  மருட்கையும்
செவ்விதின் நீக்க உதவுவது. நூ. 480: வழங்கியல் மா,  வரையறுத்த நீட்டல்
அளவையினைக்  குறித்து   வரும்   மா   என்னும்   சொல்   -  என்ற சொற்பொருளும்  அதன்   தொடர்பான  விளக்கங்களும்  இன்றியமையாத
தெளிவு  தருவன.  நூ. 481:  உம்,  கெழு  என்ற  சொற்களின்  உண்மை நிலையும்  இந்நூற்பாவில்  சுட்டப்படும்  அவற்றின் பொருண்மை நிலையும்
பற்றிய விளக்கம்  செவ்விது. நூ. 482:  நெறிப்பட  வாராக்  குறைச்  சொற்
கிளவி என்ற தொடரின் பொருளும்  விளக்கமும்  எடுத்துக் காட்டும் மிகத்
தெளிவாக  உள்ளன.  அவ்வைந்து,  ஒன்னொன்பது  என்ற  வழக்காற்றுச்
சொற்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை நன்று.
 

இதுகாறும்   குறிப்பிடப்பட்டுள்ள   செய்திகள்  யாவும்  தொல்காப்பிய
எழுத்துப்படலம் பற்றிய முன்னைய உரைகளில் காணப்