நூன்மரபு123

பொருள்:  ஒளகாரஉயிர் தவிர்ந்த    ஏனைய    பதினொரு   உயிர்
எழுத்துக்களும் மொழி இறுதிக்கண் நிற்றற்கு ஆகும்.
 

எ - டு: ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ, ஏ, ஐ, ஓஒ, ஓ  எனவரும்.
 

குற்றுயிர்கள் தனித்து ஈறாகா; அளபெடையின்கண் ஈறாகும் என்க. இனி
“ஈரள பிசைக்கும்   இறுதியில்   உயிரே”   (இடை-33)   எனப்பின்னரும்
வலியுறுத்துவார். ‘‘ஒள” என்பது குறிப்பிடைச் சொல்லாகவன்றிப் பெயராயும்
வினையாயும்  வாராமையான்  ‘‘ஒள’’  எஞ்சிய இறுதியாகும் என்றார். இது
மெய்யொடு கூடி ஈறாமாறு மேற்கூறுதலான் ஈண்டுக் கூறியது தனித்து ஈறாக
நிற்கும் நிலையை என்பது புலனாம்.
 

சூ. 70: 

கவவோ டியையின் ஒளவு மாகும்
(37)
 

க-து: 

ஒளகார உயிர் மெய்யொடு கூடி ஈறாம் என்கின்றது.
 

பொருள்:  மேல்விலக்கப்பட்ட ஒளகாரம்  ககர   வகர  மெய்களொடு
இணைந்த உயிர்மெய்யாயின் ஈறாக நிற்றற்காகும்.
 

உயிர்மெய்   ஓரெழுத்தே   எனினும்   ஓசைபற்றிப்   புணரியல்  விதி
கூறுதலானும்    ‘‘உயிர்மெய்    யீறும்   உயிரீற்    றியற்றே’’   என்பது
இலக்கணமாகலானும்   ஈண்டுக்கூறும்   மொழிநிலைகள்    புணரியலுக்குக்
கருவிகளாகலானும் ‘‘கவவோ டியையின் ஒளவு மாகும்’’ என்றார்.
 

எ - டு :  கௌ  -  வௌ   எனவரும்.   இஃது     ஓரெழுத்தொரு
மொழிக்கண்ணன்றி   வராமையான்,  ‘ஒளவும்’  என  இழிவு  சிறப்பும்மை
கொடுத்தோதினார்; அன்றி எச்ச உம்மை எனினும் ஆம்.
 

‘‘ஒள’’      அதிகாரப்பட்டமையானும்      இறுதிநிலை       பற்றிய
இலக்கணமாகலானும்  இறுதி  நிரலாக  இனிவருவனவற்றைக்  கூறுகின்றார்.
(இறுதிநிரல் = இறுதியைத் தொடக்கமாக எண்ணுதல்)
 

சூ. 71: 

எஎன வருமுயிர் மெய்யீ றாகாது 
(38)
 

க-து: 

எகர உயிர் பற்றியதொரு விதி கூறுகின்றது. ஐயமகற்றுதலுமாம்.
 

பொருள்:  எ   எனப்படும்    உயிர்எழுத்து     மெய்யொடு    கூடி
மொழியீறாகவராது.