எ - டு: நகு, புகு, வகு, அது, இது, உது, அறு, இறு, பொறு, அடு, விடு, கொடு, நடு எனவரும். |
பொருள்: ‘கவவோடியையின்’ ஒளவுமாகும் என்பது முதலாக இதுகாறும் விதந்து கூறப்பட்ட ஒள, எ, ஓ, ஏ, ஒ உ, ஊ என்பவை தவிர்ந்த அஆஇஈஐ ஆகிய ஐந்து உயிர்களும் எல்லா மெய்களோடும் கூடி ஈறாதற்குக் குறைவில. |
எ - டு: தக, பச, தட, அண, புத, தப, கம, துய, துர, கல, தவ, மழ, உள, பிற, அன்ன என அகரம் வரும். நகரம் - நக்கீரன் நப்பசலை என்றாற்போல இடைச்சொல்லாய் அகரத்தொடு வரும். ஞகரத்தொடு அகரம் வந்துழிக்காண்க. கா, சா, தடா, நுணா, தா, நா, பா, மா, யா, அரா, உலா, உவா, விழா, தளா, புறா, கனா என ஆகாரம் வரும். ஞகரத்தொடு வருவழிக் கண்டுகொள்க. ஆகி, பாசி, கடி, அணி, மதி, இப்பி, உமி, நாயி, |