பொருள்:ஞகாரம் மேற்கூறிய பகரஉகரத்தொடு ஒத்த நிலைமைத்து, ஆயினும் இது அதுபோலப் பொருள் இரண்டாகாது. என்றது; ஞகரப்புள்ளி தபு என்பதுபோல ஒருசொல்லில் மட்டும் ஈறாகவரும். எனினும் அதுபோல இது இருபொருள் தாராது என்றவாறு. |
‘அப்பொருள்’ என்றது அதுபோல என்னும் பொருட்டாய் நின்றது. இவ் ஆடையும் அந்நூலானியன்றது என்புழிப்போல என்க. இவனை என்பதில் ஐகாரம் சாரியை. |
எ - டு : உரிஞ் எனவரும். |
உவமப்படுத்து மாட்டேற்றுதற்பொருட்டு நகரத்தை முற்கூறினார். நகரஞகர ஈற்றனவாய்ச் செய்யுளீட்டச் சொல்லாக வடசொற் கிளவிகள் விரவுங்கால் தமிழ்ச் சொற்கள் இவையே என அறிதற்பொருட்டு இவற்றை எடுத்தோதினார் என்க. |
சூ. 81: | வகரக் கிளவி நான்மொழி ஈற்றது |
(48) |
க-து: | வகரப்புள்ளி நான்கு சொற்களில் ஈறாகவரும் என வரையறை கூறுகின்றது. |
பொருள்: வகரமாகிய புள்ளிஎழுத்து நான்கு சொற்களை ஈறாக உடையதாகும். |
எ - டு : அவ், இவ், உவ், தெவ் எனவரும். |
கதவு, புதவு, வரவு என்றாற்போல வருவனவற்றுள் இறுதி உகரம் சாரியை என்பதை உணர்ந்தோரும் இவை வகரஈறாம் கொல்? எனமயங்குதலின் ஆண்டு நிற்கும் வகரமெய் சாரியை உகரத்தை ஏற்கவந்த உடம்படுமெய் என்பதை உணர்த்த வகர ஈற்றுச் சொற்களை வரையறுத்தோதினார் என அறிக. |
சூ. 82: | மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த |
| னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப |
| புகரறக் கிளந்த அஃறிணை மேன |
(49) |
க-து: | ஒரோ காரணங்களைக் கருதிச் சில சொற்களை வரையறுத்த அதிகாரத்தான் னகர ஒற்று ஈறாகும் சொற்கள் இவ்வாற்றான் இத்துணை என வரையறை கூறுகின்றது. |
இதன்பயன், மகர னகரங்கள் ஒன்றற்கொன்று மாற்றெழுத்தாக வரும் என்பதும், னகரஈற்று அஃறிணைச் சொற்களுள் சில மாற்றெழுத்துப்பெற்று வாரா என்பதும் உணர்த்துதலாம். |