ஆசிரியர் உயர்திணைப்பெயர், அஃறிணை விரவுப்பெயர், எண்ணுப்பெயர், நிறைப்பெயர், அளவுப்பெயர், சுட்டுப்பெயர், வினாப்பெயர், கிளைப்பெயர், தொடக்கங்குறுகும் பெயர், திங்கட்பெயர், நாட்பெயர் என்பனவற்றை விதந்தோதியே முடிப்பார். விதந்து கூறப் பெறாதன யாவும் அஃறிணைப் பெயர்களே. அல்வழியில் பலவகைகள் இருப்பினும் ஆசிரியர் பொதுவாக அல்வழி என்று குறிப்பிடுவது எழுவாய்த் தொடரையே. அல்வழியின் ஏனை வகைகளைக் குறிப்பிடுவது கருத்தாகும் போது அவற்றை விதந்தே குறிப்பிடுவார். இறுதி மூன்று இயல்களும் உருபு மறைய அவற்றின் பொருள் தெற்றெனப் புலப்படும் வகையிலமைந்த பொருட் புணர்ச்சியையே. வேற்றுமைப் புணர்ச்சிக்கண் நுவல்வன சாரியைப் பேறு வல்லெழுத்தை விலக்காது போல்வனவாம். |
இவ்வுரையாசிரியர், முன்னவருடைய மேலைக்கருத்துக்களை முழுமையாக ஏற்பவரல்லர். ஆதலின் அவர்கள் உயர்திணைப்பெயர், அஃறிணை விரவுப்பெயர் முதலியவற்றைத் தொடர்பு பற்றி அவ்வந் நூற்பாவுரையுள் மிகைச்சொற்களால் கொள்வன யாவும் அகத்தோத்தில் அவ்வவ் வீறுகளில் அடக்கிக் கொள்ளத் தக்கன எனவும், அதிகாரப் புறனடையாற் கொள்ளத் தக்கன எனவும் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார். உரையாசிரியர்கள் உருபேற்ற பெயர் வினைகொண்டு முடிவதனை அகத்தோத்துள் ஈறுகள் தோறும் முடிப்பதனை ஏலாதவர்கள். அகத்தோத்து பொருட்புணர்ச்சி பற்றியதே அதன்கண் உருபேற்ற பெயர்கள் புணர்தலை மிகையாலேயே கொள்ளவேண்டும் என்னும் கருத்தினர். இவர் ஐ ஆன் ஒடு கு இன் அது கண் உருபேற்ற சொற்களை முறையே நேரிடையாக அவை எந்தவகைப் பெயராயினும் நூற்பாக்களைக் கொண்டே |