xx
 

முடிக்கலாம்  என்னும்  கோட்பாட்டினர்1.   பெயரொடு  உருபு  இணைந்த
சொற்களை  ஒரு  சொல்லாகக்  கொண்டு  நூற்பா  வாயிலாகப்  புணர்ச்சி
முடிவுகாண முற்படும் இவ்வாசிரியர் மிகுதி பெற்று ஒரே சொல்லாக உலகில்
பலகாலும் பயின்று வரும் வரவு தரவு - கதவு - பின்னல்,  துன்னல், கோள்
நாட்டம் ஆட்டம் என்பனவற்றை அவ்வவ் வீற்றுள் முடித்தல் பொருந்தாது
எனப் பலவிடத்தும் கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாய்த் தோன்றவில்லை2.
 

பண்டைய  உரையாசிரியர்  மிகையாற்  கொள்ளும் எடுத்துக்காட்டுக்கள்
பலவும்  பொருத்தமற்றவை   என்பது   இவ்வாசிரியர்   கருத்தாம்.  இனி,
இவ்வாசிரியர்   குறிப்பிடுவவற்றுள்   நம்போல்வார்  முழுமையாக  ஏற்றுக்
கொள்ளத்   துணிவு     தாராதவனவாக    அமைந்துள்ள    சிலவற்றை
நோக்குவோம்*.
 

நூ.  35:   புணரியல்  நிலையிடைக்  குறுகல்  -  குற்றியலிகரம்  தன்
அரைமாத்திரையிற்  குறுகி  ஒலித்தல்   என்று   பொருள்   கூறுகின்றார். குறுகல்=வருதல்  (நூ. 406)  என்னும்  பொருளது  என்று  இவ்வாசிரியரும்
உரைத்துள்ளார்3. குற்றியலிகரம் தன் அரைமாத்திரையினும் குறுக வேண்டிய
தேவை புலப்பட்டிலது. நூ. 37: நோக்கு என்ற பெயர் தனித்து நின்றுழி ஒரு
மாத்திரை, இருநோக்கு நோய்  நோக்கு  என்பவை  வருமொழி  நோக்கிக்
குற்றியலுகரமாயே  நிற்கும்  என்ற  புதுக்கருத்து  நன்கு  புலப்படவில்லை.
நூ. 51: மருண்ம் என்பது போலச் செய்யும்  என்னும்  முற்றுவாய்பாட்டான்
வரும் பிற சொற்களும் விகாரப்பட்டு ஈரொற்றாகும் என்றார். ‘‘மத்திரநாமம்
வந்து நீர்கன்ம் என’’ என முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்
 


1,2.   சாரியைகளைப்     போன்றே      வேற்றுமை     உருபுகளும்
இடைச்சொற்களாதலின்   அவற்றைக்   குறித்துவரு  கிளவியாக  வைத்துப்
புணர்த்தல்  மரபாகாமையான் அவை  பெயரொடு  கூடி  ஒருங்கு   நின்று புணரும் நிலை பற்றியே உருபியலுள் இலக்கணங் கூறப்பட்டுள்ளது என்பது
இக்காண்டிகையுரையின் கோட்பாடு,
 

*. முழுமையாக  ஏற்றுக் கொள்ளத்  துணிவு தராதவை எனப் பின்னர்க்
குறிப்பிடப்பெறும் கருத்துக்களுக்கு  நிறைவான  அமைதி  ‘‘தமிழிலக்கணக் கோட்பாடுகள்’’  என்னும்  எனது  ஆய்வுநூலுள்  பெறப்படும் மாணாக்கர் முட்டுப்பாடுறாவண்ணம்   சுருக்கமான      அமைதி    அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ளன.
 

3. 35ஆம் சூ. உரையில் கூறப்பட்ட விளக்கம்  சாலாதெனின்  ஆய்வுக் கட்டுரையுள் தெளிவாகும்.