xxi
 

கண்ணும்  ஈரொற்றுடனிலை  வருதலின் செய்யும்  என்னும்  முற்று  என்ற
வரையறை ஆராய்தற்குரியது.4
 

நூ. 39: ‘‘ஈறியல் மருங்கின்’’ - தொடர் மொழி ஆய்தம் பற்றியது என்ற
கருத்து இவ்வாசிரியரால் மறுக்கப்பட்டுள்ளது. ‘‘லகார இறுதி னகார இயற்று’’
(நூ. 366) ‘‘ளகார இறுதி ணகார இயற்று’’ (நூ. 396) மயக்கவிதி யின்மையின்
லள  என்பவை  னண  என்பவற்றின்  புணர்ச்சி  விதி  பெறும். ஆதலின்
கல் + குறை = கற்குறை; பொருள் + குறை = பொருட்குறை  என்று திரிதல் முறை.   கசதபக்களின்     மெல்லெழுத்துக்கள்   ங ஞ ந ம   ஆதலின்
மரம்  +  குறிது  =  மரங்குறிது   என   மகரங்   கெட்டு   வருமொழிக் ககரத்தின்  இனமான ஙகரப்புள்ளி  மிகுதல்  முறை.  கல்தீது   "கற்றீது - முள்தீது" முட்டீது என்பது முறை. “தகரம் வரும் வழி  ஆய்தம் நிலையல்”
(நூ. 369) இவை போல்வதன்று. இடமும் சார்பும் உள்ளமையால் (முன்னர்க்
குறிலும்  பின்னர் வல்லின உயிர்மெய்யும்)  ஆண்டு  வருமொழித்  தகரம் றகரமாகத் திரிந்த  நிலையில்  கெட்டுவிட்ட லகரத்தினிடத்தில் வந்து நிலை
பெற்றது.  குற்றெழுத்துக்கள்  கான்சாரியை  பெறும்போது விட்டிசைத்தலை
நீக்க  அஃகான்  -  மஃகான்  என்றாற்போல   ஆய்தம்    இடைவந்தது.
தொடர்மொழிக்   குற்றியலிகரம்,  தொடர்மொழிக்  குற்றியலுகரம்  போலத்
தொடர்மொழிக்   கண்ணும் ஆய்தம்  வருமாறு  பண்டை  உரையாசிரியன்
மார்களால்  கொள்ளப்பட்டது. ‘‘ஈர் இயல் மருங்கு’’ என்று பாடங்கொண்டு
ஆய்தம்   அலகுபெறுதல்,   அலகு   பெறாமை   என்ற   இருநிலையும்
பொருந்துமென்று  ஆசிரியர்  பொருள்  கூறுகிறார். ஈரியல் மருங்கு என்ற
தொடர்க்கு  இப்பொருள்  தரும்  ஆற்றல்  உண்டா?  அலகு   பெறுதல்,
பெறாமை   என்ற   செய்திகள்   ஈண்டைக்குத்    தேவையானவைதாமா?
என்றாற்போல்வன ஆராய்தற்குரியன5
 

நூ.  56:   அகரத்   திம்பர்  யகரப்  புள்ளியும்  -  அகரத்தின்  பின்
இகரமேயன்றி  அகரமும்  அதன்  பின்னிற்கும்  யகர  ஒற்றும்  -  என்று ஆசிரியர்  பொருள்  கொண்டமை நன்கு விளக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
நிலையம்  - நிலயம்  என்று  மாற்றெழுத்துப்  பெற்றுவருதலை  இந்நூற்பா சுட்டுமாறு நன்குபுலப்படவில்லை.6
 


4. ‘உண்ம்’  என  இரக்கும்  பெரும்பெயர்ச்  சாத்தன்  (புறம்  -  178)
அட்டிலோலைத் தொட்டனை  நின்மே (நற்-300) என மின் ஈற்றின் திரிபாக
உம் ஈறு ஏவல் கண்ணிய முன்னிலையாக வருதல் மூவிடப் பெயர் ஆய்வுக்
கட்டுரையுள் விளங்கும்.
 

5. சார்பெழுத்துக்களின் ஆய்வுக் கட்டுரையுள் விளங்கும்.
 

6, 7 ‘ஐகார ஒளகாரம்’ என்னும் ஆய்வுக் கட்டுரையுள் விளங்கும்.