xxiii
 

நூ.103:  மூன்று  தலையிட்ட முப்பது, இரண்டு தலையிட்ட  இருபஃது -
இவை   ஏகாதசம்,   துவாதசம்   போன்ற  உம்மைத்தொகைகள்   அல்ல. தம்மகப்பட்டவற்றை முற்கூறிப் பெரிய எண்களைப் பிற்கூறல் தமிழ்மரபன்று;
இது  வடமொழிமரபே.  தேவைப்பட்டபோது  இம்  மரபினையும்  தமிழில்
கொள்வதனால்  சிதைவு  ஒன்றுமில்லை  என்பதனைக்  காட்டவே  மூன்று
தலையிட்ட முப்பது போல்வன இடம்பெற்றுள்ளன.12
 

நூ.59:   ஓரெழுத்தொருமொழிக்கு   அதுவே   முதல்   அதுவே  ஈறு
என்பதனை விளக்கி ஒள  தனித்து  ஓரெழுத்து   ஒருமொழியாய்   வரும்
என்றார். ஒள = சுருங்கு  என்று  பொருளும்  குறிப்பிட்டார்.  உயிர்  ஒள
எஞ்சிய  இறுதியாகும்.   கவவொடு  இயையின்  ஒளவுமாகும்  (நூ. 69-70)
என்பனவற்றை  நோக்க   ஒள   தனித்து   ஓரெழுத்தொரு  மொழியாதல் ஆசிரியர்  தொல்காப்பியனார்   கருத்தன்மை  புலப்படும்.  இவரும்  ஒள என்பது   குறிப்பிடைச்   சொல்லாகவன்றிப்   பெயராயும்   வினையாயும் வாராமையின்  ஒள  எஞ்சிய  இறுதியாகும்  என்றார்  என்று  விளக்கமும்
கூறியுள்ளார். எனவே ஒள  என்ற  ஓரெழுத்தொரு  மொழியின்  உண்மை
ஆராய்தற்குரியது.13
 

நூ. 111: மீகண்-முன்றில்  என்பன  மீயென மரீஇய  இடம் வரை கிளவி
-  தொல்லியல்    மருங்கின்    மரீஇய  மரபே’   என்று   ஆசிரியரால்
சுட்டப்பட்டிருத்தலின் இவை மருவின் தொகுதியைச் சார்ந்தவை  ஆகலாம். மயங்கியல்மொழி  ஆசிரியர்   நச்சினார்க்கினியர்    குறிப்பிடுவதுபோலத் தழாத்தொடர் பற்றியதாகலாம்.14
 

நூ. 118: வழி மருங்கின் என்ற தொடரை இரண்டாக்கி - வழி, மருங்கின்
எனக் கொண்டு சாரியை ஈற்றிலும் இடையிலும், வருமென்றார் - புணர்ச்சி -
இடையில்   வரும்   சாரியைகளையும்   நிலைமொழி    ஈற்றில்   வரும்
எழுத்துப்பேறுகளையும் பற்றியதாகலின் ஈற்று  நின்றியலும்  சாரியை  பற்றி
இங்குக் குறிப்பிட வேண்டிய  இயைபின்று. ‘‘இடைநின்றியலும் சாரியைகளே
இவ்வியலில் விளக்கப்படுகின்றன’’ என்று 119 இல் இவரும்
 


12. இம்மரபு தமிழிற்கும் உரியதென்பது என் கருத்து.
 

13. மொழி-சொல்-கிளவி இவற்றின்  பொருள்  வேறுபாடு சொல்லதிகார
உரையுள் விளங்கும். (ஒளமுதனிலையாய்த் தடுமாறும் மொழி)
 

14. தழுவுத்தொடர்  -  தழாத்தொடர் என்பவை வேறு.  மரூஉமொழி -
மயங்கியல் மொழி என்பவை வேறு என்பது எனது கருத்து.