xiv
 

குறிப்பிட்டுள்ளார்.  இவர்  சாரியைக்குக்  கூறும்  பொருளும்  இக்கருத்தை
வலியுறுத்துகிறது.15
 

நூ. 120:  ஆவின்  இறுதி  -  ஆ என்ற  ஓரெழுத்தொருமொழி என்று
பொருள் கொள்ளாமல் ஆகார இறுதிச்சொல் என்றார். ஆகார ஈறு  எனின்
மூங்கா,  தாரா   முதலியனவும்   கொள்ளப்பெறும்.   ஆதலின்   ஆகார இறுதிச்சொல் என்று பொதுவாகப் பொருள் கூறுவது இயைபுடைத்தன்று.16
 

நூ. 132:   பெயரும்  தொழிலும்  வேற்றுமையுருபு  நிலை  பெறுவழிப்
பிரிந்திசைப்பப்  பெயரும்தொழிலும்  வேற்றுமையுருபு தோற்றம் வேண்டாத்
தொகுதிக்கண் ஒருங்கிசைப்பச் சாரியை பொருந்துதற்கு உரிய தொகாநிலை,
தொகைநிலைத்  தொடர்களில்  சாரியையாகும்  சொற்கள்  நடுவில்  வந்து நிற்கும்.  சாரியை  பெற்றுப்  புணர்வதும்,  பெறாமலேயே புணர்வதும் ஒரு
உருபின் தனிச்சிறப்பாகும் என்பது முன்னைய உரையாளர் கருத்து.
 

ஒட்டுதற்குரிய   வழக்கு    என்ற     தொடருக்குச்சாரியை    புணர்
மொழிகளிலேயே   பொருந்தும்   நிலையும்  உண்டு; பொருந்தா நிலையும்
உண்டு   என்று   பொருள்   கண்டனர்.   இவ்வாசிரியர்    அக்கருத்தை உடைமையும்   இன்மையும்  ஒருவயின்  ஒக்கும்  என்று  தாம்  கொண்ட
பாடத்தொடரின் பொருளாகக் கொண்டுள்ளார்.  ஒடு  உருபிற்கு  மாத்திரம் தனிச்சிறப்பு நல்குதல் இவர்க்கு உடன்படான்று.
 

சாரியை தொகைநிலை, தொகாநிலை இரண்டன் கண்ணும்  இன்னோசை
இயைதற்குரிய வாய்ப்புடைய இடங்களிலெல்லாம் இடையே வரும் என்பதே
இந்நூற்பாவின் கருத்து. இதனை ஒட்டுதற்குரிய  வழக்கு  என்ற  தொடரே
விளக்கவற்று. ஒடு உருபு ஒன்று மட்டும் பொருட் பிரிவு ஏற்படாத இடங்கள்
எல்லாவற்றிலும் ஏனைய உருபுகள் சாரியை பெற்றுவரும்  ஈறுகளிலெல்லாம்
கூடச் சாரியை பெறாது வரும் என்பது ஆசிரியர் கருத்து.
 

அவ்+ஒடு=அவற்றொடு; யா+ஒடு = யாவற்றொடு; பல+ஒடு = பலவற்றொடு;
அது+ஒடு=அதனொடு. இவை வற்றுச்  சாரியை பெறாதொழியின் அவ்வொடு,
யாவொடு,   பலவொடு   என    அமைந்து  அகரத்தொடு, யாமரத்தொடு,
பலாமரத்தொடு என்ற
 


15. சாரியை  மொழிகளின்  தன்மைகளை  ஒருங்கு  விளக்குதல் இதன்
கருத்தாகும்.
 

16. இச்சூத்திரம் இரட்டுற  மொழிதல்  என்பதன்  பாற்பட்டு  நிற்றலின் இங்ஙனம் பொருள் கொள்ளப்பட்டது.