xxv
 

கவர்  பொருளும்  தருமாதலின் இன்னோரன்ன  சில இடங்களை  விடுத்து
யாண்டும்  தொல்காப்பியத்துள் ஒடு உருபு  சாரியை பெறாமல் வருவதனை
நோக்கிப் பண்டை உரையாசிரியன்மார்  ஒடு உருபின்  சிறப்பிலக்கணமாகச் சாரியை பெறாத வழியும் பெற்றாற் போன்ற இன்னோசையொடு  அதுவரும்
என்று  குறிப்பிட்டனர்.  மெய்யொடு,  அகரமொடு,  உயிரொடு...காலமொடு,
உம்மொடு எனப் பலவகை  ஈற்றுச்  சொற்களும்  உருபியலில்  கூறப்பட்ட
சாரியை  பெறாது   ஒடு   உருபுடன்   இணைந்து   பொருள்   தருமாறு தொல்காப்பிய  எழுத்து  -  சொல்  இரு  படலத்தும் காண்க. நூ. 203 ஐ
இதனொடு இணைத்துக் காண்க.17
 

நூ.  141,  142:  வேற்றுமைத்  தொகைநிலைத்  தொடர்கள்  போல்வன
பொருள்  கொள்ளும்  முறையான்  வேறு  வேறு  படுதல்  நிலை  பெற்ற
இலக்கணமரபு.     அவை       நிலைமொழி,      வருமொழிகளிலுள்ள எழுத்துக்களானன்றிக்  கூறுவோன்  குறிப்பினாலேயே  பொருள் கொள்ளப்
படுவன     என்பது     இவ்வாசிரியர்     குறிப்பிடும்    பொருளாகும்.
யா+வற்று+ஐ = யாவற்றை;  யாவை+வற்று+ஐ = யாவற்றை  என்றே  புணரும்
அஃது + அன் + ஐ; அது + அன் + ஐ என்பன அதனை என்றே புணரும்.
அவ்+ஞாண், நூல், மணி என்பன, அஞ்ஞாண், அந்நூல், அம்மணி என்றே
புணரும்.  இவை  புணர்நிலையில் உள்ள புணர்மொழிகளை நோக்க ஒன்று
போலக்  காணப்படினும்  பிரித்து   நோக்கிய   வழியே   சொற்களளவில்
வேறுபடுதல் புலப்படும். அங்ஙனம் பிரிப்பதற்குச் சொல்லுவான் குறிப்பினை
உணர்தல் இன்றியமையாதது. வேற்றுமைத் தொகை  போல்வன  கூறப்படும்
இடம்    நோக்கி      உரியபொருள்      எளிமையின்    உணரப்படும். மேல்குறிப்பிடப்பட்டவை சொல்லுவான்  குறிப்பினை  உணர்ந்த  வழியன்றி உணரப்படா. பொருள்  வேற்றுமையும்  குறிப்பிடத்தக்க  அளவில் எதுவும்
இன்று. இன்னோரன்ன  சொற்பிரிப்பு,  கூறுவோன்  குறிப்பினை  ஒட்டியே நிகழற்பாலது  என்ற  பொருள்  பொருந்துமோ   என்பது ஆராயத்தக்கது.
நூ. 380, 381:க்கு இவ்வாசிரியர்  வரைந்துள்ள  உரை  விளக்கமும் இதற்கு
அரண் செய்யும்.18
 

நூ. 143:  தொகைமரபு  இப்படலத்தின்  இறுதி  இயல் ஆதலே ஏற்றது
என்றார்.  நூ. 143,  144,  148,  150,  163,  170   போன்ற   நூற்பாக்கள் அகத்தோத்துக்களுக்கு
 


17,18. விளக்கம் சாலாது போலும். இலக்கணக் கோட்பாட்டுக்கட்டுரையுள்
விரித்துரைக்கப்படும்.