xxvi
 

இன்றியமையாதவையாய்ப்    பல     ஈறுகளிலும்    தனித்தனி   விதந்து
கூறவேண்டுவனவற்றைச்   சுருங்க  விளக்குபவையாய்  உள்ள  செய்தியை
இவரும் உடம்பட்டுள்ளார்.  170ஆம்   நூற்பா   இவ்வைந்தாம்   இயலில்
இல்லையென்னின்  449ஆம்  நூற்பா  வெற்றெனத் தொடுத்தலாய் முடியும்.
ஆதலின் தொகை  மரபு  ஐய்ந்தாம்  இயலாக  இருத்தலே  எழுத்துப்படல
அமைப்பிற்கு ஏற்றதாம்.19
 

நூ. 155: தொல்காப்பியனார் அஃறிணை விரவுப்பெயரென்றே தம் நூலுள்
மூன்றிடங்களில்    குறிப்பிட்டுள்ளமையானும்    யாண்டும்    உயர்திணை விரவுப்பெயர்    என்பதொன்றனைச்      சுட்டாமையானும்   அஃறிணை
விரவுப்பெயர் என்பது வேற்றுமை அல்வழி என்று அல்வழியின்  உண்மைத்
தன்மைத்    தோற்றத்தை     விளக்கும்   தொடர்போல்வது.   ஆதலின் இவ்வாசிரியர் குறிப்பிடும் செய்திகள் ஆராயத்தக்கன.20
 

நூ. 156:  ‘உயிரும்  புள்ளியும்  இறுதியாகி’  என்றாற்போலக்  (நூ. 164) குறிப்பிடாமல் இறுதி என்ற சொல்லை இருவழிப்பெய்தமை  மிகை  என்பது ஆசிரியர்  நச்சினார்க்கினியர்   கருத்தாகும்.   ஏகாரநீட்சியைப்  புணர்ச்சி
விகாரமாக்குதல்  வடமொழி   மரபு   பற்றி  உரையாசிரியர்கள்  கொண்ட புலுதச்சந்தியாகும்.21
 

நூ.157: ஆடூஉ அறிசொல், மகடூஉ  அறிசொல்,  பல்லோரறியும்  சொல்
என்பன செய்யுள் விகாரமாய் வந்தன. திரிந்த புணர்ச்சியின்மையின்  விகார
வகையான் உருபு தொக்கது என்றலே நேரிது. அவற்றை ஒருசொல்  நடைய
என்று  ஆசிரியர்   சொற்றாரேயன்றிப்  புணரியல்  நிலையிடை  உணரத்
தோன்றாதனவற்றுள் அடக்கினாரல்லர். இவற்றைப் பிரித்து மனங்கொள்ளாத
வழி இரண்டன் உருபு தொக்கமை புலப்படாது.22
 

நூ. 209:  சாவ - இறுதிவகரம - இச்சொல்லில்  வகரம்  இறுதியிலேயே உள்ளது. ஆதலின்  வகரம் என்றலே சாலும் - இதனை உட்கொண்டு இஃது
அகர ஈற்று வினையெச்சமாதலைத்
 


19. கருத்து வேறுபாட்டிற்கு இடமுண்டு.
 

20. இதுபோன்ற ஐயங்கள் சொல்லதிகார உரையுள் விளங்கலாம்.
 

21. இவைபோல்வன உரையாளர் கருத்துக்களே நூற்கருத்தன்று என்பதே
எனது கருத்துமாம்.
 

22. கருத்து வேறுபாட்டிற்கு இடமுண்டு.